Header Ads



நபிகள் நாயகத்தை, ஜெயலலிதாவுடன் ஒப்பிட்ட அமைச்சர் - அவை குறிப்பிலிருந்து பேச்சு நீக்கம்



சட்டசபையில் நடந்தது என்ன ? தமிமுன் அன்சாரி அறிக்கை.....!!
சட்டசபையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இழிவுப்படுத்தப்பட்டும் தமிமுன் அன்சாரி எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வேடிக்கை பார்த்ததாக முகநூலில் தீயாக பரவிய அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்....
சட்டசபையில் நேற்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது பல மதக்கடவுள்களோடு முதல்வரை ஒப்பிட்டு பேசி அத்தோடு நபிகள் நாயகம்(ஸல்) அவர்களையும் ஒப்பிட்டு பேசினார்.
அவர் பேசி அமர்ந்ததும் நானும், முஸ்லிம் லீக் உறுப்பினர் அபூபக்கரும் இதற்கு ஆட்சேபனை செய்தோம்.
இதை அவையில் இருந்த அதிமுக, திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் பார்த்தார்கள்.
எங்கள் இருவரின் ஆட்சேபனையை ஏற்று அதை சபாநாயகர் அவை குறிப்பிலிருந்து நீக்கி விட்டார்.
அதன் பிறகு அவை முடிந்ததும் நானும், அபூபக்கரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் சென்று அதன் விபரீதத்தையும், கருத்தியல் தவறையும் விளக்கியதை அவர் ஏற்றுக் கொண்டார்.
நானும் அபூபக்கரும் இணைந்தே இவ்விஷயத்தில் பேசியதையும், கருத்துக்களை பரிமாறிக் கொண்டதையும் அருகில் இருந்த விஜயதரணி (காங்கிரஸ்), கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை) ஆகிய இருவரும் கவனித்துக் கொண்டேயிருந்தனர்.
உண்மைகளை அறிய விரும்புபவர்கள் எனது நண்பர் அபூபக்கர் MLA விடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டுகிறேன்.
மேற்கண்டவாறு தமிமுன் அன்சாரி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

2 comments:

  1. உலகத்தில் தரங்கெட்வன் அதிகமாக வாழும் இந்தியாவில் அடிக்கடி இவ்வாறு பேசுவதும் பிறகு அழித்துவிட்டோம் என்று சொல்வதும் வழக்கம் நபிகள் நாயகம் அவர்களுடைய சின்னி விரல் நுணிகூட அந்நிய பெண்ணின் விரலில் கூட பட்டதில்லை அப்படிப்பட்ட மகானை இந்த சினிமா கூத்தாடியுடன் ஒப்பிட்டு பேச இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது?

    ReplyDelete
  2. Licking dog will no seen the status of the person.

    ReplyDelete

Powered by Blogger.