Header Ads



ஒலிம்பிக் வரலாற்றை மாற்றிய அல் - தீஹனி


2016 ரியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் சுதந்திர ஒலிம்பிக் விளையாட்டு வீரராக களமிறங்கிய பெஹாய்ட் அல்-தீஹனி ( Fehaid Al-Deehani), துப்பாக்கி சுடும் போட்டியான (Double Trap) பிரிவில் தங்கப் பதக்கத்தை பெற்று, உலக சாதனை ஒன்றை நிலைநிறுத்தியுள்ளார்.

தங்கப் பதக்கத்தை பெற்ற முதலாவது சுதந்திர ஒலிம்பிக் விளையாட்டு வீரர் எனும் சாதனையே அதுவாகும்.

எந்தவொரு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தாத வீரர் ஒருவர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றும் நிலையில் அவர், சுதந்திர ஒலிம்பிக் விளையாட்டு வீரராக கருதப்படுவார் என்பதோடு, அவ்வாறு பங்குபற்றுவோர் ஒலிம்பிக் கொடியின் கீழ் தங்களை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஒலிம்பிக் சபையால், குவைத் ஒலிம்பிக் சபைக்கு தடைவிதிக்கப்பட்டமை காரணமாக, குவைத் நாட்டவரான பெஹாய்ட் அல்-தீஹனிக்கு சுதந்திர ஒலிம்பிக் வீரராக களமிறங்க வேண்டிய நிலை தோன்றியது.

குவைத் ஒலிம்பிக் சபையில், அந்நாட்டு அரசாங்கத்தின் தலையீடு இருந்தமையால், அதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் குவைத்திற்கு இவ்வாறு தடைவிதிக்கப்படுவது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த தடையானது, அச்சபையின் தெரிவு, அந்நாட்டில் காணப்படும் போதை பாவனை போன்ற காரணிகளால் இவ்வாறு தடைவிதிக்கப்படுவதுண்டு. ஆயினும் உலகளாவிய போட்டியில் பங்குகொள்ளும் உரிமையை உறுதி செய்யும் நோக்கில், சர்வதேச ஒலிம்பிக் சபை இவ்வாறு அனுமதி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் இதற்கு முன்னர் கடந்த 1992 இல் பாஸிலோனாவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிளின், துப்பாக்கி சுடும் போட்டியில் (Women's 10m Air Pistol) யுகொஸ்லாவியாவைச் சேர்ந்த இரு பெண்கள் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்றதோடு, அதே நாட்டைச் சேரந்த ஆண் ஒருவர் (Men's 50m Rifle prone) வெண்கல பதக்கத்தை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் தங்கப் பதக்கத்தை பெற்ற ஒரே ஒரு வீரராக பெஹாய்ட் அல்-தீஹனி சாதனை நிலைநாட்டியுள்ளார்.

அல்-தீஹனி குவைத் இராணுவத்தில் பணிபுரியும் ஒருவர் என்பதோடு, ஒலிம்பிக் போட்டி ஆரம்பத்தில் ஒலிம்பிக் கொடியை ஏந்தி வருமாறு மேற்கொள்ளப்பட்ட வேண்டுகோளை மறுத்த அவர், "நான் ஒரு இராணுவ வீரன். நான் குவைத் கொடியை மாத்திரமே ஏந்துவேன்" எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அல்-தீஹனி, 2000 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் குறித்த போட்டி பிரிவில், குவைத் நாடு சார்பில் பங்குபற்றி இரு வெண்கல பதக்கங்களை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Double Trap - துப்பாக்கி சுடும் போட்டி

16 யார் தூரத்திலிருந்து வேகமாக வீசப்படும் இரு களி தட்டுகளை துப்பாக்கி (Shotgun) மூலம் சுடுவதே Double Trap Shooting என அழைக்கப்படும்.


No comments

Powered by Blogger.