Header Ads



முஸ்லிம்கள் அணியும், முழுநீள நீச்சல் உடைக்கு தடைநீக்கம் - ஐ.நா. வரவேற்பு

புர்கினி என்று அறியப்படும் முஸ்லிம் பெண்கள் அணியும் முழு நீள நீச்சல் உடையை, ஃபிரான்ஸில் சில கடற்கரைகளில் அணிய இருந்த தடையை, அந்நாட்டு உயரிய நீதிமன்றங்களில் ஒன்று இடைநிறுத்தியிருக்கும் உத்தரவை ஐ.நா. மனித உரிமை ஆணையம் வரவேற்றிருக்கிறது.

ஃபிரான்சின் உள்ளூர் அதிகாரிகள் பலரால், மத்தியதரைக்கடல் கடற்கரைகளில் நிறைவேற்றப்பட்டிருந்த இது தொடர்பான தடைகள், முஸ்லீம்களை களங்கப்படுத்துவதால் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று இந்த ஆணையம் தெரிவித்திருக்கிறது.

ஃபிரான்ஸின் சில மேயர்கள் இந்த தடையை தொடர்ந்து செயல்படுத்தப் போவதாக வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த வாரம் நீஸ் நகரக் கடற்கரையில் உடல் முழுவதையும் மூடிக்கொள்ளும் நீச்சல் உடையை அகற்றுவதற்கு ஒரு முஸ்லீம் பெண்ணை நான்கு காவல் துறையினர் கட்டாயப்படுத்துகின்ற புகைப்படங்கள் வெளியாகி, முஸ்லீம் சமூகத்தினர் மற்றும் மனித உரிமை பரப்புரையாளர்களின் மத்தியில் கோபத்தை தூண்டியது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. இந்தப் பெண்ணின் அனுமதியுடனா படத்தை போடுறீங்க. முகத்தை மறைத்தாவது படத்தைப் போடலாமே???

    ReplyDelete
  2. ஆம். பகிரங்கமாக இவ்வாறான நிலையில் தனது புகைப்படம் வெளியாவதை இந்தப் பெண் விரும்பாமல் இருக்கலாம். பெட்டி கை சொன்னது போல் முகப் பகுதியை மறைத்துப் போடலாம்.

    ReplyDelete

Powered by Blogger.