Header Ads



மஹிந்த எனது தந்தை அல்ல - சார்ள்ஸுக்கு றிசாத் பதிலடி, சபாநாயகரிடமும் முறைப்பாடு

-சுஐப் எம்.காசிம்-
   
பாராளுமன்ற நிலையியற் கட்டளை சட்டத்தை மீறி தனது சிறப்புரிமையை கேள்விக்குட்படுத்திய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டுமென அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். 

அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று காலை (12/08/2016) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை வருமாறு 

கௌரவ சபாநாயகர் அவர்களே:

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை (11/08/2016) இடம்பெற்ற கெளரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடத்திலான கேள்வி நேரத்தின்போது, வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சார்ள்ஸ் நிர்மலநாதன் அவர்கள், நான் சபையில் பிரசன்னமாகி இல்லாத நிலையில், பாராளுமன்ற நிலையியற் கட்டளை தொடர்பாக என்னுடைய சிறப்புரிமைகளை மீறி பல்வேறு அவதூறான விடயங்களை தெரிவித்து, இந்த உயரிய சபையை  பிழையாக வழி நடத்தியுள்ளார் என்பதை மிகவும் வேதனையுடன் இந்த சபையின் கவனத்துக்கும், உங்களுக்கும்   கொண்டுவர விரும்புகின்றேன். திட்டமிட்ட அடிப்படையில் தொடர்ச்சியாக இவர் இவ்வாறான விடயங்களை இந்த சபையில் கூறி வருகின்றமையானது, ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்களை மீறுகின்ற ஒருசெயல் என்பதை நான் ஆரம்பத்திலே கூறி வைக்க விரும்புகின்றேன்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் சட்டத்தின் 84 ஆம் பிரிவில் பல உபபிரிவுகளை இவர் பகிரங்கமாகவே மீறி, எனது சிறப்புரிமையை இந்தச் சபையில் அவமதித்தமையானது, என்னை மாத்திரமின்றி பல இலட்சக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள எனது கட்சியின் ஆதரவாளர்களினதும் மனதைப் புண்படுத்தியுள்ளமை மிகவும் மோசமான ஒரு செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது.  இவர் தனது உரையில் என்னை மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் அவரது மகனென்று நான் கூறித் திரிந்ததாக, என் மீது அபாண்டங்களை கூறியுள்ளார். எனது தந்தையின் பெயர் அப்துல் ரஹ்மான் பதியுதீன் என்பதையும், பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸுக்கும் இந்த சபைக்கும் நான் தெளிவாக சொல்லிவைக்க விரும்புகின்றேன். அவரது இந்தக் கூற்றின் தாற்பரியம் எவ்வளவு பாரதூரமானது என்பதை இந்தச் சபை புரிந்துகொள்ள வேண்டும்.    

மேலும் நீதி மன்றத்துக்கு கல்லெறிந்தவர் என என்னை இந்த உயர்சபையில் கூறி, ஒரு அப்பட்டமான அவதூறின் மூலம் இந்தச் சபையினையும், நாட்டு மக்களையும் பிழையாக வழிநடத்த இவர் முயற்சித்துள்ளார்.  இந்த விடயம் தொடர்பாக இந்த நாட்டின் எந்தவொரு நீதி மன்றத்திலும், எனக்கெதிராக வழக்குத் தொடரப்படவில்லை என்பதையும், எந்தக் குற்றச்சாட்டு இல்லை என்பதையும், இது ஓர் அப்பட்டமான பொய் என்பதையும்  இந்த உயர் சபையின் கவனத்துக்கு நான் கொண்டுவர விரும்புகின்றேன்.      

2016 மார்ச் 23 ஆம் திகதி புதன்கிழமை வெளிவந்த ஹன்சாட் 756 ஆவது பக்கத்தில் காணப்படும் உரையின் ஒரு பகுதியில் என்னுடைய பெயரை குறித்து அவர் என்னை மோசமாக கேவலப்படுத்தியுள்ளார்.  கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மன்னார், வங்காலை எனும் பெரிய கிராமத்தில், எனது கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரை நான் எனது அமைச்சில் இணைத்திருப்பதாகக் கூறி இந்த சபையில் பேசக்கூடாத விடயங்களை பேசி எனது சிறப்புரிமையை மீறியுள்ளார்.     அதேபோன்று 2016 ஏப்ரில் 07 ஆம் திகதி வியாழக்கிழமை வெளிவந்த ஹன்சாட்டில் என்னைப்பற்றி அவர் பல பொய்களை கூறியுள்ளார். அது ஹன்சாட்டில் பதியப்பட்டுள்ளது. சார்ள்ஸ் எம்.பி என்னைப்பற்றிய இவ்வாறான கூற்றுக்களையும், இட்டுக்கட்டப்பட்ட பொய்களையும் திரும்பத்திரும்பக் கூறி எனது கௌரவத்துக்கும், நற்பெயருக்கும் அபகீர்த்தி விளைவித்து வருவதை நான் தங்களின் மேலான கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன். 

சபாநாயகர் கருதினால், அவரது தற்றுணிபில், அவர் அச்சொற்களை அல்லது அக்கூற்றுக்களை பாராளுமன்ற விவாதங்களின் அதிகார அறிக்கையிலிருந்து (ஹன்சாட்) அகற்றுவதற்கு கட்டளையிடலாம் என்பதோடு அவ்வார்த்தைகள் அல்லது கூற்றுக்கள் சொல்லப்படாத சொற்களாகக் கருதப்படுதலும் வேண்டும்.  மேற்கூறிய அடிப்படையில் இந்த குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தேச்சியாக, இந்த உயரிய சபையிலே என்னை அவமானப்படுத்தி வருகின்றார். இதன் மூலம் என்னை மாத்திரமின்றி, இலட்சக்கணக்கான எனது ஆதரவாளர்களையும் அவமானப்படுத்தி, எனது நன்மதிப்புக்கு களங்கம் கற்பிக்க முயற்சித்து வருவதன் காரணமாக பின்வரும் வேண்டுகோள்களை இந்த சபையில் உங்களிடம் வேண்டுகின்றேன்.

முதலில் எனது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறி ஆற்றியுள்ள இந்த உரையை ஹன்சாட்டிலிருந்து நீக்குமாறும், இரண்டாவதாக அவர் இந்த உரையினை ஆற்றியமைக்காக, இந்த சபையில் பகிரங்கமாக மன்னிப்புக்கோருமாறும், இல்லையெனில் அதற்குத் தகுந்தவாறான நடவடிக்கையை கௌரவமான சபாநாயகராக இருக்கும் நீங்கள் எடுக்க வேண்டுமெனவும், அதேபோன்று இதற்கு முக்கியத்துவம் வழங்கிய இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள், இந்த செய்தியினை வாபஸ் பெறுவதற்குமான நடவடிக்கையினை எடுப்பதோடு, சார்ள்ஸ் எம்.பியின் செய்திக்கு எவ்வாறு முக்கியத்துவம் வழங்கினார்களோ, அதேயளவு முக்கியத்துவத்தை வழங்க உத்தரவிடுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.      

10 comments:

  1. if dog barks, will you also bark ?

    ReplyDelete
  2. தமிழ் தேசியம் பேசும் இனவெறி மிருகங்களுக்கு உயரிய சபையாவது மண்ணாவது. இவர்கள் தீவிரவாத சூழலில் வன்னி காட்டில் வாழ்ந்தமையால் இவர்களுக்கு கொழும்புபி, நகர்ப்புறங்களை, எல்லாம் புதிதான விடயம். அதான் எங்க எப்படி பேசவேண்டும் என்கிற இங்கிதம் தெராயாமல் உளறுகின்றனர்

    ReplyDelete
    Replies
    1. அது சரி. ஆணால் சார்ள்ஸ் சொன்னவைகள் அவ்வளவும் 100% உண்மை தானே.

      Delete
  3. Actually the Tamil parliamentarians do not know what to talk or where to talk.

    ReplyDelete
  4. Racist are tamil terrorist like you and your dead ltte.

    ReplyDelete
  5. எது எப்படியோ அரசியல்வாதிகள் எப்படியும் கதைக்கலாம் என்று நினைத்து கதைப்பவர்கள் இவரைப்போன்றவர்கள் அதிலும் வட மாகாணத்தில் இவர்மட்டும் இல்லை இவரைப்போன்ற இன்னும் பலபேர் இருக்கின்றார்கள் இதற்கு காரனம் மக்கள் தங்கலை ஒன்றும் கதைக்காமல் தாங்கள் வையிறு வளர்க்கின்றார்கள் என்று கூறுவார்கள் என்ற காரனத்திற்காக எதை கதைக்கின்றேம் எதற்காக் கதைக்கின்றேம் என்று தங்களுக்கே தெறியாது இப்படியானவர்களை மக்கள் ஏன் தெறிவு செய்தார்களோ தெரியவில்லை,

    ReplyDelete
  6. Charles was a Tamil racist criminal.

    ReplyDelete
  7. Tamils(LTTE)forgets their blood thirsty past and humiliation at the hand of our security forces,now want to turn their gun against Muslims and Muslim politicians know nothing what to talk.This ingratitude tiger terrorist forget that Mr.Rishad did to Tamil IDPs when he was rehabilitation Minister during the time of MR.These super humans, think others are not human but born to serve them, never want to have peaceful co- existence but confrontation and killing as their counter parts doing in India.

    ReplyDelete
  8. @ Mahendran, who is racist and criminal? Why did you forget about Karuna and Pillayan who killed many innocent Tamils, Muslims and Buddhists..Everybody knows and the courts are investigating about their past. Rishad is a real Muslim gentleman and there are no records in any courts that shows he is a criminal. Shun your bloody racist views now and forever.

    ReplyDelete
    Replies
    1. @First Last, Didn't you know Rishad's ex-God father Rajapakse deleted all his criminal records.

      Delete

Powered by Blogger.