Header Ads



தனித்து SLFP அரசாங்கமொன்றை அமைப்போம் - மைத்திரிக்கு நேரடி அழைப்பு

தனித்து சுதந்திரக் கட்சியின் அரசாங்கமொன்றை அமைப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, பாராளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம அழைப்பு விடுத்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எம்மிடம் மொத்தமாக 95 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். ஏன் எம்மால் அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்ள முடியாது.

நீங்கள் வாருங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு. அவ்வாறு வந்தால் நாம் உங்களுக்கு ஆதரவளிக்கின்றோம்.

அவ்வாறு இல்லாது ஐக்கிய தேசியக் கட்சியை தாங்கி பிடிக்க நாம் தயாரில்லை. நீங்கள் எங்களது பாராளுமன்ற உறுப்புரிமையை பறிப்பீர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, பதிலளித்த ஜனாதிபதி "கட்சியை விட்டு விலக்க மாட்டேன். எனினும் எமது கட்சியின் பணிகளை முன்னெடுக்க தொகுதி அமைப்பாளர்களை நியமிக்க வேண்டியுள்ளது.

அவ்வாறு செய்தால் அந்த அமைப்பாளர்களின் கூட்டங்களுக்கு செல்ல வேண்டி நேரிடும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. These people are rogues who robbed the coffer, in order to avoid the FCID investigation and impending jail life they are inviting My3 to form a SLFP gov. Eventually what will happen if this become reality, they will make a similar coup like similar Arab spring and will reinstate Mahinda Rajapakse as president of Sri Lanka. But forming of SLFP gov is not going to happen and it is only a day dream.

    ReplyDelete

Powered by Blogger.