Header Ads



துருக்கியின் கொள்கை, வியக்கத்தகும் விதமாக தலைகீழ் மாற்றம் - BBC


-BBC-

அண்டை நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்தும் தற்போதைய புதிய முயற்சியின் ஒரு அங்கமாக, சிரியாவுடன் நல்ல உறவுகளை உருவாக்கிக் கொள்ள துருக்கி நோக்கம் கொண்டுள்ளதாக துருக்கியின் பிரதமர் பினாலி இல்டிரிம் தெரிவித்துள்ளார்.

சிரியாவின் அதிபர் பஷர் அல்-ஆஸாத்தை தூக்கியெறிய அழுத்தம் தந்து கொண்டிருந்த துருக்கியின் கொள்கையிலிருந்து வியக்கத்தகும் விதமாக தலைகீழ் மாற்றம் நடந்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியா ஆகியவற்றின் ராஜிய அலுவலர்கள் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக பிராந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.

அண்மை வாரங்களில் சுறுசுறுப்பாக நடந்து வரும் ராஜிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடம் தான் கொண்டிருந்த சண்டையை துருக்கி முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

3 comments:

  1. cheers.... sensible move. On right direction

    ReplyDelete
  2. அப்படியாயின் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
    துருக்கியின் கடைசி காலம்.
    அர்துகானின் இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டது.

    ReplyDelete
  3. Mashallah very gud news to all

    ReplyDelete

Powered by Blogger.