Header Ads



மீள்குடியேற்ற செயலணி குறித்து, ஹுனைஸ் பாரூக்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்பதையே நானும் விரும்புகின்றேன். கட்சிகள் பலவும் அவற்றை விரும்பினாலும், அரசியல் காரணங்களுக்காக அதனை வெளியில் கூறமாட்டார்களென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தெரிவித்தார். 

யாழ்.ஊடக அமையத்தில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், சர்வதேச விசாரணைதான் வேண்டும் என்று கூறினாலும், அதனை உறுதிபட அவர் கூறமாட்டார். மேலோட்டமாகவே சொல்லுவார்' என்றார். 'மீள்குடியேற்ற செயலணியில் வடமாகாணத்தில் உள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். கட்டாயம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அல்லது வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் இருந்திருக்க வேண்டும்' என்று அவர் மேலும் கூறினார். 

2 comments:

  1. இந்த ஒரு முஸ்ஸிம் MP தான் நேர்மையாக பேசுகிறார்.
    மற்றவர்கள் பதவிக்காகவும் 4W drive வாகவும் மக்களை குழப்பிக்கொண்டிருப்பார்கள்.

    ReplyDelete
  2. I am appreciated ex. MP hon Hunais Farook announcements

    ReplyDelete

Powered by Blogger.