Header Ads



இலங்கை அணியின் முகாமையாளரை திட்டி, முரளிதரன் குழப்பம் விளைவிப்பு

இலங்கையின் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இலங்கை அணியின் முகாமையாளரை திட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் கண்டி பல்லேகலே மைதானத்தில் இன்னும் இரண்டு தினங்களில் வோர்ன் முரளி கிண்ண டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில் முரளிதரன் இலங்கை அணி முகாமையாளரை திட்டி குழப்பம் விளைவித்தார் என தகவல் கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவர் திலங்க சுமதிபால இன்று ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

பலந்தமான முறையில் மைதானத்திற்குள் புகுந்து குழப்பம் விளைவித்தார் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பந்து வீச்சு பாணி தொடர்பில் சர்வதேச ரீதியாக குற்றம் சுமத்தப்பட்ட போது கிரிக்கட் சபையும் இலங்கை மக்களும் முரளிக்காக குரல் கொடுத்திருந்தனர்.

அவ்வாறான ஓர் நிலையில் தமது தாய் நாட்டுக்கு எதிராக பிறந்த மண்ணில் இருந்து கொண்டு செய்வது வருத்தமளிக்கின்றது. மைதானம் பயிற்சிக்காக ஒதுக்கப்படாத நிலையில் முரளிதரன் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

இந்த விடயம் குறித்து கிரிக்கட் சபையின் ஊடாக அவுஸ்திரேலிய கிரிக்கட் சபைக்கு அறிவிக்கப்படும். முரளிதரன் முன்னாள் வீரர் மட்டுமே எந்தவொரு நாட்டுக்கும் தனது சேவையை வழங்குவதற்கு அவருக்கு உரிமையுண்டு.

எனினும் முரளியின் இந்த நடவடிக்கையை நாட்டு மக்கள் எதிர்பார்க்கவில்லை. வோர்ன் முரளி கிண்ணப் போட்டித் தொடரில் எமது என கருதப்பட்ட முரளிதரன், அவுஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர்களை பயிற்றுவிப்பது எந்த வகையில் நியாயமானது என திலங்க சுமதிபால கேள்வி எழுப்பியுள்ளார்.

2 comments:

  1. இலங்கை முன்னைநாள் வீரர்கள் அடுத்த நாடுகளுக்கு பயிட்சி அளிப்பது போல் அடுத்த நாட்டு வீரர்களும் இலங்கைக்கு பயிட்சி அளித்தனரே , உதாரணமாக Tom Moody & Stuart Law இதை அவர்கள் குறை சொன்னார்களா? இது Thilanga Sumathipalaவின் சிறுபிள்ளை தனமான கூற்று .

    ReplyDelete

Powered by Blogger.