Header Ads



முரளீதரனுக்கு எதிராக குற்றச்சாட்டு


இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரனுக்கு எதிராக சில ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

இலங்கை மற்றும் இந்திய ஊடகங்கள் குற்றம் சுமத்தும் வகையில் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக முத்தையா முரளீதரன் கடமையாற்றுகின்றார்.

உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக போற்றப்படும் முரளீதரன் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர், முரளீதரன் பந்தை வீசி எறிவதாக (சக்கர்) என குற்றம் சுமத்தப்பட்டிருந்தார் எனவும் தற்போது முரளீதரன் அவுஸ்திரேலிய அணிக்கு உதவி செய்வதாகவும் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு முரளீதரன் இலங்கை அணியின் ரகசியங்களை எதிரணிக்கு வழங்குவதாக இலங்கை மற்றும் இந்திய ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், தொழில்சார் ரீதியில் முன்னாள் நட்சத்திர வீரர் ஒருவர் ஆலோசனை சேவை வழங்குவதில் தவறில்லை என இலங்கை அணித் தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இலங்கை அணியின் நட்சத்திர கிரிக்கட் வீரர் மஹல ஜயவர்தன இங்கிலாந்து அணிக்கு துடுப்பாட்டம் தொடர்பில் ஆலோசனை வழங்கிய போதிலும் இதேவிதமான விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. He has no pride any one can buy murali for money
    He should learn fro amla who lose big money for not wearing beer logo

    ReplyDelete
  2. Why the people blaming Murali,because he is a Hindu ??
    Then What about Mahela-coaching to England?
    Mahanama,And Gurusinhe and many other player are coaching other countries ....Come on People of sri lanka be fair dont bring ur Cheap Racism In sports

    ReplyDelete

Powered by Blogger.