Header Ads



கைப்பற்றப்படும் போதைப் பொருட்களுக்கு என்ன நடக்கின்றது..? மக்களுக்கு சந்தேகம்


இலங்கை சுங்க திணைக்களத்தினால் கைப்பற்றப்படும் போதைப் பொருட்களை விசாரணைகளின் பின்னர் பகிரங்கமாக அழிக்குமாறு கோரி அகில இலங்கை சுங்க சேவையாளர் சங்கம் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கேட்டுள்ளது.

கடந்த காலங்களில் சுங்க அதிகாரிகளினால் பெருந்தொகையான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்படும் போதைப் பொருட்களுக்கு இறுதியில் என்ன நடக்கின்றது என்ற சந்தேகம் மக்களுக்கு இருக்கின்றது.

போதைப் பொருட்கள் நீண்டகாலம் வைக்கப்பட்டுள்ளன. இவை ஒரு பலவீனமான அதிகாரியின் கைகளுக்கு சென்றால், மீண்டும் சந்தைக்கும் வர வாய்ப்பிருப்பது மறுக்க முடியாது.

இதனால், கைப்பற்றப்படும் போதைப் பொருட்கள் தொடர்பில் ஆரம்ப விசாரணைகள் முடிவடைந்த பின்னர், வழக்கிற்கு தேவையாள அளவில் வைத்து கொண்டு, ஏனையவற்றை பகிரங்கமாக அழிக்க நடவடிக்கை எடுக்குமாறு அகில இலங்கை சுங்க சேவையாளர் சங்கம் ஜனாதிபதிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

1 comment:

  1. They should burn it in public like other countries

    ReplyDelete

Powered by Blogger.