Header Ads



அலெப்போ நகரை, கைப்பற்ற உச்சகட்ட போர்

சிரியாவில் ஆட்சியாளர்களுக்கு எதிரான அல்-கொய்தா தீவிரவாத குழுவினரின் ஆதரவுபெற்ற நுஸ்ரா போராளிகளின் பிடியில் இருந்து அலெப்போ நகரை மீட்பதற்காக நடைபெற்றுவரும் உச்சகட்ட போரில் இருதரப்பிலும் 73 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போவை கைப்பற்ற அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான படைகள் ஆவேசமான உச்சகட்ட போரில் ஈடுபட்டு வருகின்றன. இருதரப்பினருக்கும் இடையிலான 48 மணிநேர தற்காலிக போர்நிறுத்தம் இன்றுடன் முடியும் நிலையில் அலெப்போ நகரை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் இருதரப்பினருக்கும் இடையிலான மோதலில் இதுவரை 73 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நுஸ்ரா போராளிகள் படையைச் சேர்ந்த உள்ளூர் தளபதி உள்பட 43 பேரும், அதிபரின் ஆதரவுப் படையைச் சேர்ந்த 30 வீரர்களும் பலியானதாக சர்வதேச போர் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

No comments

Powered by Blogger.