Header Ads



தாலிபான் தலைவர் மன்சூர் படுகொலை - உறுதிப்படுத்திய ஒபாமா, பாகிஸ்தான் கண்டனம் (படங்கள்)

ஆளில்லா விமான தாக்குதலில் தாலிபான் தலைவர் மன்சூர் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக இருந்து வந்தவர் முல்லா உமர். இவர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அந்த இயக்கத்தின் தலைவராக, அவரது உதவியாளராக இருந்த முல்லா அக்தர் மன்சூர் (வயது 48), கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29–ந் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.முல்லா அக்தர் மன்சூர் பதவிக்கு வந்த பின்னர் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் நடத்தி வந்தனர். அதில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகினர். ஆப்கானிஸ்தான் படை வீரர்களும் ஏராளமாக கொல்லப்பட்டனர். அது மட்டுமல்ல, அமெரிக்க கூட்டுப்படை வீரர்களும், தலீபான்கள் தாக்குதல்களில் உயிரிழக்க நேரிட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள அகமது வால் என்ற இடத்தில் நேற்று முன்தினம் முல்லா அக்தர் மன்சூரை குறி வைத்து ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா வான்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அவரும், அவருடன் காரில் பயணம் செய்த மற்றொருவரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்ட தகவலை தலீபான் தீவிரவாத வட்டார தகவல்களும் உறுதிப்படுத்தின.

இதற்கிடையே,  ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான்  அமெரிக்காவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஆளில்லா விமான தாக்குதல் இறையாண்மைக்கு எதிரானது எனவும், அமெரிக்காவின் இந்த செயல் குறித்து பிரதமர் மற்றும் ராணுவ தளபதியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற QCG ஆலோசனை கூட்டத்தில், ஆப்கானிஸ்தானில் நீடித்த அமைதி நிலவ அரசியல் பேச்சுவார்த்தை மூலமான தீர்வு சாத்தியமான வழி எனவும், வன்முறையை கைவிட்டு பேச்சுவார்த்தையில் இணையுமாறு தலீபானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதையும் நினைவு கூர்ந்துள்ளது.



4 comments:

  1. The Article simply showed bad imaged to TALIBANS, But played double standared in not pointing the 1000s of civilian killed by US Drone attacks.

    We rely on west news.. BUT what is really happening on ground ..?

    Who is protecting public and Islam ?

    May Allah Guide Muslims and UNITE us with the sense of TAWHEED as our priority than worldly gains and looks.

    ReplyDelete
  2. Yes Brother M Rasheed you are right. Without coping article from another media and past. Reporter has to right the news from his side( No Cut & past) I'm have seen in many article in this way. We need to watch out.We don't have to say/Write Taliban Terrorists.
    Who is Terrorist in Iraq WAR President Saddam Hussain or USA Bush/invaders??? World know the answer to this. Watch out....

    ReplyDelete
  3. But also the terrorist should be killed and thrashed away from this world.... They are first enemy of Islam and other peaople

    ReplyDelete
  4. Yes Terrorist should be killed but who is Terrorist?
    Sri Lanka Government? Or LTTE? Who is Terrorist?
    Palestine (The real Historical Owner of Palestine)? Or the Israel? (Illegal Occupiers of Palestine)? Who is Terrorist? The definition of Terrorism getting wrong brother. May Allah Guide us.

    ReplyDelete

Powered by Blogger.