Header Ads



அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சருடன், முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு


-விடிவெள்ளி ARA.Fareel

முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அமைச்சர் யாப்பா
வெல்­லம்­பிட்­டிய, மல்­வானை உட்­பட கொழும்புப் பகு­தியில் வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் வீடு­களைச் சுத்தம் செய்­வ­தற்கு முப்­ப­டை­களை  அர­சாங்கம் பயன்­ப­டுத்­த­வுள்­ளது.

வீடு­களைச் சுத்தம் செய்து அவர்­களை அங்கு குடி­யேற்­று­வ­தற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் அரசு துரி­த­மாக மேற்­கொள்­ள­வுள்­ளது. இத்­த­க­வலை அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் அநுர பிரி­ய­தர்­சன யாப்பா தன்னைச் சந்­தித்த முஸ்லிம் அமைப்புகளின் பிர­தி­நி­தி­க­ளிடம் தெரி­வித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீனின் தலை­மையில் அகில இலங்கை ஜம்­இ­யத்துல் உலமா சபை, தேசிய சூரா கவுன்ஸில், கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம் மற்றும் வை.எம்.எம்.ஏ. உட்­பட முஸ்லிம் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் நேற்று அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சர் அநுர பிரி­ய­தர்­சன யாப்­பாவை அவ­ரது அமைச்சில் சந்­தித்து வெள்ள நிவா­ரண உத­விகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­னார்கள்.

இந்தச் சந்­திப்பின் போதே அமைச்சர் அநுர பிரி­ய­தர்­சன யாப்பா குறிப்­பிட்ட தக­வல்­களை வெளி­யிட்டார்.

அர­சாங்கம் தேவை­யான அனைத்து நிவா­ர­ணங்­க­ளையும் வழங்கி வரு­வ­தா­கவும் எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான இயற்கை அனர்த்­தங்கள் நிக­ழா­தி­ருப்­ப­தற்கு மாற்றுத் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மெ­னவும் அவர் உறு­தி­ய­ளித்தார்.

தற்­போது மக்­க­ளுக்கு பாத­ணிகள், தும்புத் தடிகள், பெண்­க­ளுக்­கான ஆடைகள், உறங்­கு­வ­தற்­கான மெத்­தை­களே உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­வ­தா­கவும் அமைச்சர் தெரி­வித்தார்.

குறு­கிய காலத்தில் ஆகக் கூடி­ய­ளவு மழை பெய்­த­த­னா­லேயே இந்த அனர்த்தம் ஏற்­பட்­ட­தா­கவும் சட்­ட­வி­ரோத குடி­யேற்­றங்­களும் இதற்குக் கார­ண­மாகும் எனவும் அவர் கூறினார்.

அமைச்­சர்­களைச் சந்­தித்த முஸ்லிம் அமைப்­பு­களின் பிர­தி­நி­திகள் கொழும்பு பிர­தே­சத்தில் வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உதவி செய்யும் முக­மாக வெள்ள நிவா­ரண இணைப்பு பணி­ய­க­மொன்­றினை அகில இலங்கை ஜம்­மிய்­யத்துல் உலமா சபையின் தலைமைக் காரி­யா­ல­யத்தில் அமைத்து இயக்கி வரு­வ­தாகத் தெரி­வித்­தனர்.

இந்தப் பணி­யகம் இன, மத, மொழி வேறு­பா­டின்றி நிவா­ரண உத­வி­களை வழங்­கு­வ­தற்­காக செயற்­பட்டு வரு­வ­தா­கவும் தெரி­வித்­தனர்.

கொழும்பு நகர்ப்­பு­றங்­களில் வாழ்ந்த மக்­களின் வீடுகள் உடைக்­கப்­பட்­ட­தனா லேயே அம் மக்கள் வெல்­லம்­பிட்­டிய உட்­பட பல தாழ்­நிலப் பகு­தி­களில் குடி­யேற வேண்­டி­யேற்­பட்­ட­தா­கவும் இதனால் அவர்கள் இன்று துன்­பங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் அமைச்­ச­ருக்கு விளக்­கி­னார்கள். இன்று பாதிக்­கப்­பட்ட மக்கள் உற­வி­னர்­க­ளது வீடு­களில் வாழ்ந்து வரு­வ­தா­கவும் அவர்­க­ளுக்­கான உத­வி­களை இன வேறு­பா­டின்றி நிவாரண இணைப்புப் பணி­யகம் முன்­னெ­டுக்கும் என்றும் தெரி­வித்­தனர்.

நகர்ப்­புறப் பகு­தியில் இவ்­வா­றான பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்­பட்ட முதல் சம்­பவம் இது­வெனத் தெரி­வித்த அமைச்சர், தேவை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு அதி­கா­ரி­க­ளினால் சுற்று நிரு­பங்கள் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன எனவும் கூறினார்.

இதே­வேளை, கொழும்பு பகு­தியில் வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்டு முகாம்­க­ளிலும் உற­வினர் வீடுகளிலும் தங்கியிருக்கும் மக்கள் தமது விபரங்களை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைமைக் காரியாலயத்தில் இயங்கிவரும் நிவாரண இணைப்பு பணியகத்துக்கு வழங்குமாறும் இன்றே பள்ளிவாசல்கள் மூலம் தெரியப்படுத்துமாறும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் எம்.எம்.ஏ. முபாரக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.