Header Ads



ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவருக்கு, விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது


வங்கதேசத்தின் மிகப்பெரிய இஸ்லாமியக் கட்சியின் தலைவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் மொய்துர் ரஹ்மான் நியாசியின் மேல் முறையீட்டை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானுடன் நடைபெற்ற விடுதலைப் போரில், அவர் இழைத்த குற்றங்களுக்காக குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தார்.

வங்கதேச விடுதலைப் போரில் ஏராளமானோர் துன்பத்துக்குள்ளானார்கள்.

இனப்படுகொலை, இதர கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் பலாத்காரம் ஆகிய குற்றங்களை அவர் புரிந்தார் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

மரண தண்டனையிலிருந்து தப்ப இனி அவர் நாட்டின் அதிபரிடம் கருணை மனு மட்டுமே அளிக்க முடியும்.

1 comment:

  1. The Bangladesh President is killing Islamic leaders and scholars according to the plan of India and west countries. This is a big human right violent

    ReplyDelete

Powered by Blogger.