Header Ads



குறைநிறைப்பு பிரேணையில் அரசு தோல்வி, பாராளுமன்றத்தை கலைக்க கோரிக்கை

அரசாங்க செலவினங்களுக்கான குறைநிரப்புப் பிரேரணை தொடர்பில் மீள்வாக்கெடுப்பு ஒன்றை நடத்த நாடாளுமன்றம் சற்று முன்னர் தீர்மானித்துள்ளது.

இன்று மாலை அரசாங்கத்தின் நடப்பு நிதியாண்டுக்கான செலவினங்களுக்காக 55 மில்லியன் குறைநிரப்புப் பிரேரணையொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான வாக்கெடுப்பில் எதிர்த்தரப்புக்கு 31 வாக்குகள் கிடைத்திருப்பதாகவும், அரசாங்கம் 33 வாக்குகளைப் பெற்று இரண்டு மேலதிக வாக்குகளினால் வெற்றிபெற்றிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

குறைநிரப்புப் பிரேரணையில் அரசாங்கம் தோல்வி

எனினும் கூட்டு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறையினுள் வாக்கெடுப்பு தொடர்பான காணொளிகளைப் பரிசோதனை செய்தபோது அரசாங்கத்துக்கு ஆதரவாக 30 வாக்குகளும், எதிராக 31 வாக்குகளும் செலுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து குறைநிரப்புப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வியுற்றுள்ளதாக குற்றம் சாட்டிய கூட்டு எதிர்க்கட்சியினர், நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த குறைநிரப்புப் பிரேரணை தொடர்பில் மீள்வாக்கெடுப்பு ஒன்றை நடத்த சபாநாயகர் உத்தரவிட்டுள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.

இதற்காக ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜகிரிய பிரதேசத்தின் ஊடாக நாடாளுமன்றத்தை நோக்கி விரைந்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.

குறைநிரப்புப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பில் அரசாங்கம் தோல்வியுற்றுள்ளதாக தெரிவித்து கூட்டு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தைக் கலைக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தைக் கலைக்கக் கோரும் கூட்டு எதிர்க்கட்சி

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற நடப்பு நிதியாண்டுக்கான குறைநிரப்புப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பில் அரசாங்கம் ஒரு வாக்கினால் தோல்வியடைந்துள்ளதாக எதிர்க் கட்சியினர் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளனர்.

நாடாளுமன்றத்திலுள்ள வீடியோ காட்சிகளை பரிசோதனை செய்து, அளிக்கப்பட்ட வாக்குகளை மீள எண்ணிய பின்னர் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.

நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் அறையினுள் வாக்கெடுப்பு தொடர்பான காணொளிகளைப் பரிசோதனை செய்தபோது அரசாங்கத்துக்கு ஆதரவாக 30 வாக்குகளும், எதிராக 31 வாக்குகளும் செலுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

எதிர்க் கட்சியின் ஒரு குழுவினர் தற்பொழுதும் பாராளுமன்ற வளாகத்தில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னதாக இது தொடர்பான வாக்கெடுப்பில் அரசாங்கம் 33 வாக்குகளையும், எதிர்க்கட்சி 31 வாக்குகளையும் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.