Header Ads



எனது தந்தை குறித்த, ஒரு பதிவு

-Abu Ariya-

எனக்கு சிறந்த முன்மாதிரிகளைக் கற்றுத்தந்த பண்பாட்டின் சிகரம் - என் மதிப்புக்குரிய தந்தை அவர்கள்.

மிக எளிமையான வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்த குடும்பத்தில் 03வது குழந்தையாக எனது தந்தை பிறந்தார். மொத்தமாக 07 சகோதர சகோதரிகளைக் கொண்ட இவர் தனது குடும்பத்தில் நிலவிய வறுமையின் காரணமாக பாலர் பாடசாலைக்கு வெறும் 3 மாத காலம் மாத்திரம் சென்றார்.

தனது பெயரைத் தவிர வேறெதையும் எழுதவோ, வாசிக்கவோ தெரியாத இவர் 08வது வயதில் கூலித்தொலிழ் செய்ய ஆரம்பித்தார். 12வது வயதில் தனது தந்தையை இழந்தது முதல் குடும்பப் பொறுப்பை தன் தோல் மீது சுமக்கலானார். இதனால் மீனவனாக கடற்றொழில் செய்யலானார்.

தனது குடும்பத்தை வறுமை நிலையிலிருந்து மீட்டெடுக்க பெரிதும் பாடுபட்ட என் தந்தை அதில் திருப்தியடையும் அளவு தன்னை அர்ப்பணித்தார்.

தனது 25வது வயதில் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட தந்தைக்கு மொத்தமாக 08குழந்தைகள' உள்ளனர். தனது ஒவ்வொரு குழந்தையையும் சிறந்த கல்விமானாக மாற்ற வேண்டுமென்ற இலக்கோடு தன்னையே வருத்தி பெரும் சிரமத்துக்கு மத்தியில் மாதாந்தம் கல்விச்செலவுக்காக 40ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவளித்தார்.

அல்லாஹ்வுடைய உதவிகொண்டு எனது தந்தையின் முயற்சிக்காக ஒரு பட்டதாரியையும், பொறியியலாளரையும் இதுவரை அன்பளிப்பாக வழங்கிய அல்லாஹ் தற்போது கல்வி கற்றுக்கொண்டிருக்கும் ஏனைய குழந்தைகளையும் வைத்தியராக, மேலும் துறைசார்ந்த கல்விமான்களாக ஆக்கக் கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது.

சீதனம் எடுக்கத்தெரியாத, புகைத்தல் பாவனையற்ற, மனித மனங்களை உடைக்கத்தெரியாத புன்னகைத்த முகம் கொண்டு ஐந்து நேரமும் அல்லாஹ்வை தொழுது வணங்கும் என் மதிப்புக்குரிய தந்தை உயர்ந்த மனிதரல்லவா..?


4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Absolutely rifan brother

    ReplyDelete
  3. Masha ALLAH. ...
    Have so many fathers like this....may ALLAH grand him jannathul firdows

    ReplyDelete

Powered by Blogger.