Header Ads



பறவை மோதியதால், விமானத்தின் முகப்பில் பெரிய பள்ளம்


அமெரிக்காவின் சியாட்டில் நகரத்தில் இருந்து டெல்லாஸ் நகரத்திற்கு செல்வதற்காக அமெரிக்கா ஏர்லைன்ஸ் விமானம் ‘டேக் ஆப்’ ஆன போது சில பறவைகள் விமானத்தின் நுனிப் பகுதி மீது மோதியது.

இதனை அடுத்து விமானக் கட்டுப்பாடு அறையை தொடர்புக் கொண்ட விமானி, பாதுகாப்பு காரணத்திற்காக உடனடியாக விமானத்தை தரையிறக்க விரும்புவதாக குறிப்பிட்டார். இதனை அடுத்து சியாட்டில் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. 

விமானத்தை சோதித்த அதிகாரிகள், விமானத்தின் நுனிப்பகுதியில் ஏற்பட்டிருந்த பெரிய பள்ளத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பறவைகள் மோதிய இடத்தில்தான் விமானத்தின் காலநிலை ரேடார் உள்ளது. பறவைகள் மோதியதால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. எனவே அதிகாரிகளின் அனுமதிக்கு பிறகு விமானம் பொலிஸ் நகரத்திற்கு கிளம்பிச்சென்றது. 

இந்த சம்பவத்தில் விமானிக்கோ, பயணிகளுக்கோ எவ்வித காயமும் ஏற்படவில்லை. 

No comments

Powered by Blogger.