Header Ads



கிழக்கில் தமிழ் - முஸ்லிம் விரி­சல் ஏற்­ப­டும் நிலை - விஜித ஹேரத்

வடக்கில் இடம்­பெ­யர்ந்த மக்கள் தமது சொந்த இடங்­களை அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தற்­கான காலத்தை இரண்டு வரு­டங்­க­ளாக அதி­க­ரிப்­ப­தற்கு அர­சாங்கம் நேற்று -06- சபையில் தனது இணக்­கத்தை தெரி­வித்­தது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜபக் ஷவினால் முன்­வைக்­கப்­பட்ட ஆட்­சி­யு­ரிமை (விசேட ஏற்­பா­டுகள்) சட்ட மூலத்தின் இரண்டாம், மதிப்­பீடு மீதான விவா­தத்தின் போது ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உரை­யாற்­றினார்.

இதன்­போது, இச் சட்ட மூலத்தில் விதந்­து­ரைக்­கப்­பட்­டுள்ள வடக்கில் இடம்­பெ­யர்ந்த மக்கள் தமது சொந்தக் காணி­களை அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தற்­காக ஒரு வருட கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது.  அக்­கால அவ­காசம் போது­மா­ன­தல்ல. எனவே அதனை இரண்டு வரு­டங்­க­ளாக அதி­க­ரிக்க வேண்டும். அதற்­கான திருத்­தத்தை உள்­ளீர்க்க வேண்­டு­மெனத் தெரி­வித்தார். 

இதற்கு சபையில் பதி­ல­ளித்த போதே அமைச்சர் விஜே­தாச ராஜபக் ஷ தமது சொந்தக் காணி­களை அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தற்­கான காலத்தை இரண்டு  வரு­ட­மாக அதி­க­ரிக்கும் திருத்­தத்தை அரசு ஏற்றுக் கொள்­வ­தாக அறி­வித்தார். 

இவ் விவாதத்தில் தொடர்ந்து உரை­யாற்­றிய ஜே.வி.பி. எம்பி. விஜித ஹேரத் 

வடக்கு மக்­களின் காணியில் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்­கான அரசின் நட­வ­டிக்­கை­களை வர­வேற்­கின்றோம். 30 வருட கால­யுத்­தத்தால் வடக்கில் தமிழ் மக்கள் அதிகம் பாதிக்­கப்­பட்­டார்கள். இடம்­பெ­யர்ந்து பல பிர­தே­சங்­களில் வாழ்ந்­தனர். பலர் இந்­தி­யா­விற்கும் சென்­றுள்­ளனர்.

இன்று யுத்தம் முடிந்த பின்னர் அவர்கள் வாழ்ந்த இடங்­களில், வீடு­களில் வேறு குடும்­பங்கள் வாழ்­கின்­றார்கள்.  எனவே இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணப்­பட வேண்டும். அவர்­க­ளது சொந்த இடங்­களை அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தற்­காக இச் சட்­ட­மூ­லத்தில் ஒரு வருட கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இது வச­தி­ப­டைத்­தோ­ருக்கு பிரச்­சி­னை­யாக இருக்­காது.

ஆனால் வசதி குறைந்த நடுத்­தர மக்­க­ளுக்கு இக்­கால அவ­காசம் போதாது. எனவே அக்­கால அவ­கா­சம் இரண்டு வரு­டங்­க­ளாக அதி­க­ரிக்­கப்­பட வேண்டும். வடக்கைப் போன்று கிழக்­கிலும் காணிப் பிரச்­சி­னைகள் உள்­ளன. 

கிழக்கின் பிரச்­சினை தமிழ் முஸ்லிம் மக்கள் மத்­தியில் விரி­சலை ஏற்­ப­டுத்தும் நிலையில் உள்­ளது. அங்கு பெரும்­பா­லான தமிழ் மக்­களின் காணி­கள், கருணா குழு­வி­னரும் இனி­ய­பா­ரதி  போன்ற தமிழ் குழுக்­க­ளினால் பறிக்­கப்­பட்­டன. யுத்த காலத்தில் இக் குழுக்கள் தமிழ் மக்­களின் காணி­களை பறி­முதல் செய்­தனர்.

எனவே இப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான தீர்­வுகள் காணப்­பட வேண்டும். இது புரை­யோ­டிப்­போனால் மீண்டும் இனங்­க­ளுக்­கி­டையில் மோதல்கள் தலை­தூக்க இட­முள்­ளது. யுத்தம் முடிந்த பின்னர் அதே­போன்று கடந்த ஆட்­சி­யா­ளர்கள் தெற்­கி­லி­ருந்து சிங்­கள மக்­களை கொண்டு வந்து வடக்கின் போகஸ்­வெவ பகு­தியில் குடி­யேற்­றினர்.

இதன் போது அவர்­க­ளுக்கு அனைத்து அடிப்­படை வச­தி­களும் வழங்­கப்­படும். சட்­ட­பூர்­வ­மான காணி உரிமை வழங்­கப்­ப­டு­மென கடந்த ஆட்­சி­யா­ளர்கள் உறு­தி­ய­ளித்­தனர். ஆனால் இன்றும் 5 வரு­டங்கள் கழிந்தும் அம்­மக்­க­ளுக்கு தாம் வாழும் காணிக்கு சட்ட உரிமை கிடைக்­க­வில்லை. 

இதே­போன்று கொக்­கிளாய், நாவற்­குழி பிர­தே­சங்­க­ளிலும் 40 வரு­டங்­க­ளுக்கு மேலாக சிங்­கள மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கும் இன்று வரை தமது காணிகளுக்கு சட்ட பூர்வமான அந்தஸ்து கிடைக்கவில்லை. 

இவை தொடர்பில் அரசு அதிக கவனம் செலுத்தி தீர்வுகளை காண வேண்டும் இல்லா விட்டால் நாட்டில் மீண்டும் இனங்களுக்கிடையே முரண்பாடுகள் தலைதூக்கும் என்றும் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்தார். s

No comments

Powered by Blogger.