Header Ads



கிழக்கு மாகாணத்தில், போலி கல்வி நிறுவனங்கள்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

கிழக்கு மாகாணத்தில் பதிவு செய்யப்படாத போலி கல்வி நிறுவனங்கள் பற்றி எச்சரிக்கையொன்று வெளியாகியுள்ளது.

சமூக நல ஆர்வலரான காமிஸ் கலீல் இது தொடர்பாக இன்று வியாழக்கிழமை (07) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாணத்தில் க.பொ.த. (சா.த) மற்றும் க.பொ.த. (உ.த) போன்ற பரீட்சைகள் எழுதிய மாணவர்களை இலக்குவைத்து இயங்கும் சில அதிகாரம் பெறாத கல்வி நிறுவனங்கள் டிப்ளோமா மற்றும் மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அங்கிகாரம் பெற்ற சான்றிதழ்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி குறித்த மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள் எனும் பெயரில் தமது கல்வி நிறுவனங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்து வருகின்றன.

மேற்படி கல்வி நிறுவனங்கள், மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவிலோ அல்லது வேறு இலங்கை அரசின் உயர் கல்விசார் நிறுவனங்களினாலோ முறையாக அங்கிகரிக்கப்படாமல் இவ்வாறான முன்னெடுப்புக்களில் ஈடுபடுவது பற்றி பெற்றோர்களும் மாணவர்களும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இந்நிறுவனங்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பினை எதிர்பார்த்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கே அதிகளவாக விநியோகிக்கப்படுகின்றன.

அத்தோடு, இச்சான்றிதழ்கள் வெளிவிவகார அமைச்சினால் அங்கிகரிக்கப்படுவதற்கு எவ்வித தகுதிகளும் அற்றவை என்பதே உண்மையாகும்.

மேலும், முறையாக நான்கு தொடக்கம் பன்னிரண்டு மாதங்கள் கற்பிக்கப்படவேண்டிய பாட நெறிகளை ஒன்று தொடக்கம் மூன்று மாதங்களில் கற்பிக்கப்படுவதாகக் கூறி குறித்த மாணவர்கள் அடைய விளையும் தேர்ச்சியினை மிகவும் இலகுவாக சீரழித்தும் விடுகின்றனர்.

எனவே, இந்த மோசடி குறித்து பெற்றோர்கள் விழிப்படைந்து தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்படைய ஆவன செய்ய முடியும்.

கல்வி நிறுவனம் ஒன்று மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவில் பதியப்பட்டுள்ளமையினை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

உறுதி செய்து கொள்ளும் இணைய தள முகவரி: http://220.247.221.26/Insreg_Home/Insreg_Institute_Search.php என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

3 comments:

  1. தயவுசெய்து இதற்க்குரிய அதிகாரிகள் பொலிஸ் பாதுகாப்புடன் திடீர் சோதனையினை நடாந்த்தி பதிவு செய்யப்படாததும் முறைகேடாக இயங்குகின்றதுமான அனைத்து கல்வி, தொழில்கல்வி நிறுவனங்களை இனம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்குமாறு இளம் தலைமுறை சார்பாகவும் வினைய மாக வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. yes this is ture pls try to find.

    ReplyDelete
  3. Yes, what Mr. Hussain say is correct. But, very important fact that we should know is "accreditation of the course after registration of institute" with Tertiary and Vocational Education Commission. All the registered institutes are not conducting accredited courses.

    ReplyDelete

Powered by Blogger.