Header Ads



அல்லாஹ்வின் கோபப் பார்வையிலிருந்து, பாதுகாப்பு பெற்றுக் கொள்ளுங்கள்...!

-அபு அர்ஹம்-

அல்லாஹ்வின் கட்டளைகளில் துணிச்சல் கொள்ளும் பெண்களே..! அவனின் கோபப் பார்வையில் இருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ளுங்கள்...!!

முஸ்லிம் விவாக விவாகரத்துக்கு முஸ்லிம் பெண்கள் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளார்கள். அவற்றில் சொல்லப்பட்டுள்ள விடயங்களில் சிலதை பார்க்கும் போது வல்லவன் அல்லாஹ் இஸ்லாமிய மார்க்கத்தை பூர்த்தி செய்யாமல் குறைபாடுகளுடன் அமைத்துள்ளான். அதனை நாம் தான் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற சிந்தனையை தோற்றுகின்றது.

அல்லாஹ்வின் கட்டளைகளில் துணிச்சல் கொள்ளும் பெண்களே அவனின் கோபப் பார்வையைப் பயந்து கொள்ளுங்கள். முஸ்லிம் விவாக, விவாகரத்துடன் சம்பந்தப்பட்டவர்களே இவர்களின் இக் குறுகிய சிந்தனையுடைய கருத்துக்களை கவனமாகக் கையாளுங்கள். அல்லாஹ் அனைத்து விடயங்களையும் மிக நுணுக்கமாக அவதானிக்கின்றான் என்ற விடயம் நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை.
அவைகளில் சிலதை இங்கு தொட்டுக் காட்டுகிறேன்.

01. பெண்களின் வயதெல்லை மட்டிடல் வேண்டுமாம். 

(இக்கருத்தை உற்று நோக்கும் போதே அவர்கள் குறுகிய சிந்தனையுடையவர்கள் என்ற விடயம் மிகத் தெளிவாகின்றது. இன்று எத்தனை சிறுவயதுடைய பெண்கள் பாலியலில் ஈடுபடுகின்றார்கள் என்ற விடயம் நாளாந்தம் நமக்கு ஊடகங்கள் அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. இவைகளை படித்துக் கொண்டுதானே இக் கருத்தை முன்வைக்கின்றார்கள். இது வரை நம் நாட்டில் 12 வயதை விட குறைந்த பிள்ளைகளின் திருமணம் முஸ்லிம்கள் மத்தியில் எத்தனை நடைபெற்றுள்ளது என்ற புள்ளி விபரங்களை பார்த்துதானா சட்டம் பேசுகின்றீர்கள்? அதே நேரம் மற்றவர்கள் பதிவே இல்லாமல் சிறு வயதிலேயே தாம்பத்திய வாழ்வில் இருந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? இஸ்லாத்தில் நமது பெண் பிள்ளைகளின் திருமணத்திற்குரிய வயது இதுதான் என ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியுமா?

02. பெண்கள் காழிமார்களாக நியமிக்கப்படல் வேண்டுமாம்.

(இஸ்லாமிய ஷரீஆ அதன் ஆரம்பம் முதல் இன்றுவரை பாதுகாக்கப்பட்டுள்ளது என்றால் அதன் வழிகாட்டல்கள் பேணப்பட்டதே காரணமாகும். இது இவ்வாறு இருக்க ஆண்களுக்கு சமனாக போட்டி போட்டுக் கொண்டு பெண்களும் காழிகளாக வர வேண்டும் என ஆசை கொள்வது பிழையான ஒரு அணுகுமுறையாகும். பெண்கள் விடயமாக துருவி ஆராய வேண்டிய சந்தர்ப்பங்களில் காழிமார்களின் துணைவிமார்கள் உதவி புரியலாம் அல்லது விசாரணை மன்றில் பெண்கள் நியாயசபை

அங்கத்தவர்களாக பணிபுரியலாம். இதுவே அவர்களுக்கு ஏற்றதாகும் என்பதை மறுக்கமாட்டார்கள்.

03. பலதார திருமணத்திற்கு கட்டுப்பாடுகள் அமைக்கப்படல் வேண்டுமாம்.

(பெண்களே! இவைகளில் அநீதி இழைக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டை தாங்கள் முன்வைக்கலாம். அதற்கு சட்டரீதியான அனுகுமுறைகளை கையாண்டு தமது தரப்புக்குரிய நியாயங்களை பெற்றுக்கொள்ளல் வேண்டும். மாற்றமாக அல்லாஹ்வின் கட்டளைகளில் கைவைக்க முன்வர வேண்டாம். பெண்கள் காழிமார்களாக வருவதற்கு மார்க்கத்தில் இடம் இருக்கின்றதா? பலதார திருமணம் செய்பவர்களுக்கு மார்க்கத்தில் கட்டுப்பாடுகள் உள்ளதா? தற்பொழுது ஆண்களை விட பெண்கள் அதிகரித்துக் கொண்டு இருக்கின்ற இக்கால கட்டத்தில் ஆண்களை பலதார திருமணத்தின் பக்கம் உற்சாக மூட்டவேண்டும். இதனைத் தவிர்த்து பலதார திருமணத்திற்கு நிபந்தனைகள் இடுவதன் மூலம் நாளை பெண்கள்தான் மேலும் மேலும் கஷ்டத்தில் விழுவார்கள். விபச்சாரங்களும் அதிகரிக்கலாம். மணம் புரியாத முதிர்கண்ணிகளும் அதிகரிக்கலாம்.

04. மதாஹ் மற்றும் விவாகரத்துக்கான சட்டங்கள் நிபந்தனைகளை நியமித்தல்.

(இவைகளுக்குரிய தெளிவான சட்டதிட்டங்கள் நமது மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. அவைகளையே நாம் எடுத்துக் கொள்வோம்.
இது போன்ற இன்னும் சில விடயங்கள் உள்ளன. சுருக்கமாக சில விடயங்களை மாத்திரம் சுட்டிக்காட்டினேன். சமூகத் தலைமைகள் இவ்விடயத்தில் மிக தூர நோக்குடன் செயற்படுமாறும். விழிப்புடன் இருந்து கொள்ளுமாறும் வேண்டிக் கொள்கின்றேன்.

1 comment:

  1. இதைப்பற்றி எவரும் பின்னூட்டலிடமாட்டார்கள் அரசியல் சம்பந்தமாக வாய்கிழிய பின்னூட்டலிடுவார்கள் பின்னூட்டலுக்கு அழகின்மையால் எனது மனக்குமுறலை கட்டுப்படுத்துகிறேன் இல்லாவிட்டால் மொழி அவை ஒழுக்கம் இல்லாமல் போய்விடும் என்பதால். இஸ்லாத்தில் அவ்வாறானதொரு இவ்வாறான விடையங்களில் பெண்களின் தலைமைத்துவம் இருந்தால் அதைப்பற்றியும் எம் அருமைத்தூதர் அதை சொல்லாமல் விடமாட்டார்கள். இதில் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை கியாமத் நாள் நெருங்கும் போது தகுதியில்லாதவர்கள் தலைமைத்துவத்திற்கு வருவார்கள்

    ReplyDelete

Powered by Blogger.