Header Ads



சேறு பூசும் சுவரொட்டிகளுக்கும், பதாகைகளுக்கும் தடை - ரணில் அறிவிப்பு

ஏனைய தரப்புக்களுக்கு சேறு பூசும் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் என்பனவற்றை காட்சிப்படுத்திவோ, பயன்படுத்தவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“அர்ப்பணிப்புச் செய்த மக்களுக்கு புதிய நாடு” என்ற தொனிப் பொருளில் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

இந்த தொனிப் பொருளுக்கு புறம்பான வகையிலான வேறும் எந்தவொரு அரசியல்வாதிக்கு தனிப்பட்ட ரீதியில் சேறு பூசும் வகையிலான சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்கள் பயன்படுத்தக் கூடாது என மே தினக் கூட்ட ஏற்பாடாளர்களிடம் கோரியுள்ளார்.

எந்தவொரு அரசியல்வாதியையும் இழிவுபடுத்தும் கோசங்களை மே தினக் கூட்டத்தின் போது எழுப்ப வேண்டாம் எனவும், அவ்வாறு கட்சியின் ஆதரவாளர்கள் கோசமிடுவதற்கு தொகுதி அமைப்பாளர்கள் தூண்டக் கூடாது எனவும் அவர் கோரியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின், தேசிய அரசாங்கம் சட்டத்தை மதிக்கும் அரசாங்கம் என்பதனை நிரூபிக்கும் வகையில் இம்முறை மே தினக் கூட்டம் நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

மே தினப் பேரணியில் பங்கேற்கும் அமைச்சர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் பேரணி ஆரம்பம் முதல் இறுதிவரையில் ஒன்றாக செல்ல வேண்டுமென பிரதமர் கோரியுள்ளார்.

மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன மைதானத்தில் ஆரம்பமாகும் பேரணி பொரளை கெம்பல் மைதானத்தை மாலை 4.00 மணி அளவில் சென்றடைந்து அதன் பின்னர் மே தினக் கூட்டம் நடத்தப்டவுள்ளது.

பேரணி ஆரம்பித்து செல்லும் வழியில் மூன்று இடங்களில் பிரதமர் பேரணியுடன் இணைந்து கண்காணிக்க உள்ளதாக கொழும்பு பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.