Header Ads



வட­மா­காண சபையும், விக்­கி­னேஸ்­வ­ரனும் பய­ணிக்கும் பாதை தவ­றா­னது - சம்­பிக்க

வென்­றெ­டுத்த ஜன­நா­ய­கத்தை குழப்பும் வகை­யிலும் சர்­வ­தேச மற்றும் புலம்­பெயர் அமைப்­பு­களின் நோக்­கத்தை நிறை­வேற்றும் வகை­யி­லேயே வட­மா­காண சபை­யி­னதும், விக்­கி­னேஸ்­வ­ரனினதும் செயற்­பா­டுகள் அமைந்­துள்­ளன. தமது தவ­றான பாதையில் இருந்து மாறி நாட்டை ஐக்­கி­யப்­ப­டுத்தும் கொள்­கையில் இவர்கள் செயற்­பட வேண்டும் அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.

வட­மா­காண சபையின் பிரச்­சி­னை­களை அர­சாங்­கத்­துடன் கலந்­தா­லோ­சித்து அந்த பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வுக்­கான முன்­வர வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

வட­மா­காண சபையின் அண்­மைக்­கால செயற்­பா­டுகள் நாட்டை குழப்பும் வகையில் அமைந்­துள்­ள­தாக விமர்­ச­னங்கள் எழுந்­துள்ள நிலையில் அது தொடர்பில் வின­வி­ய­போதே அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

யுத்­தத்தின் மூலம் நாட்டில் பிரி­வினை வாதம் தலை­தூக்­கிய நிலையில் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்து பிள­வு­ப­ட­வி­ருந்த நாட்டை மீட்­டெ­டுத்தோம். விடு­த­லைப்­பு­லி­களின் ஆயுத போராட்டம் முடி­வுக்கு வந்த போதிலும் கடந்த காலங்­களில் தமிழ் அர­சி­யல்­வா­திகள் பிரி­வி­னை­வாத கொள்­கையில் செயற்­பட்­டனர். எனினும் முன்­னைய குடும்ப ஆட்­சியில் மேற்­கொண்ட சர்­வா­தி­கார ஆட்­சி­மு­றையும் அடக்­கு­மு­றையும் அனைத்து தரப்­பையும் அதி­ருப்­திக்­குள்­ளா­கி­யது. அத­னா­லேயே கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது தமிழ் தலை­மைகள் தமது பிரி­வி­னை­வாத கொள்­கையில் இருந்து விடு­பட்டு ஐக்­கிய இலங்­கைக்குள் ஜன­நா­யக மாற்றம் என்ற நிலைப்­பாட்டில் ஒன்­றி­ணைந்­தனர்.

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது வடக்கு கிழக்கு மக்­களின் ஆத­ர­வையும் பெற்று ஒட்­டு­மொத்த இலங்­கை­யர்­களின் மாற்­ற­மான ஒரு ஆட்­சி­மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தினோம். அதில் தமிழ் அர­சியல் தலை­மை­களும் பங்­கு­கொண்டு தமது ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­யமை வர­வேற்­கத்­தக்க ஒன்­றா­கவே கரு­து­கின்றோம். எனினும் இப்­போது சமஷ்டி என்ற பெயரில் தமிழ் தலை­மைகள் முன்­னெ­டுக்க முயற்­சிக்கும் பிரி­வி­னை­வாத பாதைக்கு அர­சாங்கம் ஒரு­போதும் இட­ம­ளிக்­காது. வடக்கு கிழக்கு மாகா­ணங்­களை மொழிசார் பிராந்­தி­ய­மா­கவோ அல்­லது இனம் சார் பிரந்­தி­ய­மா­கவோ பிரிக்க முடி­யாது. இலங்­கையில் அனைத்து பகு­தி­க­ளிலும் சகல மக்­களும் வாழ்­வ­தற்­கான உரிமை உண்டு. வடக்கில் தமி­ழர்கள் மட்­டுமே வாழ­மு­டியும் என்ற தீமானம் எடுப்­ப­தாயின் தெற்கில் வாழும் தமி­ழர்­களின் நிலைமை என்­ன­வாகும் என்­ப­தையும் தமிழ் அர­சியல் தலை­மைகள் சிந்­திக்க வேண்டும்.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு பெற்­றுத்­தர வேண்டும். அவர்­களின் காணி­களில் அவர்­களை குடி­ய­மர்த்த வேண்டும். அந்த நோக்­கத்தில் அர­சாங்கம் செயற்­பட்டு வரு­கின்­றது. ஆனால் அதி­காரப் பகிர்வு என்­பது நாட்டை பிரிக்கும் வகையில் அமைந்­து­விடக் கூடாது. எனினும் இன்று விக்­கி­னேஸ்­வரன் மற்றும் வட­மா­காண சபையின் நோக்கம் மீண்டும் பிரி­வி­னையின் பக்கம் சார்ந்து செல்­கின்­றது. அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தாது நாட்டை குழப்பும் வகையில் இவர்கள் செயற்­பட்டு வரு­கின்­றனர்.

வட­மா­காண சபையும் விக்­கி­னேஸ்­வ­ரனும் பய­ணிக்கும் பாதை தவ­றா­னது. இவர்­களின் பாதையை மாற்­றிக்­கொண்டு ஐக்­கிய இலங்­கைக்குள் ஒன்­றி­ணைந்து பய­ணிக்க ஆரம்­பிக்க வேண்டும். அதை விடுத்­தது சர்­வ­தேச பிரி­வி­னை­வாத கொள்­கை­யிலும் புலம்­பெயர் அமைப்­பு­களின் நிகழ்ச்சி நிரல்­களை கையாண்டும் இலங்­கைக்குள் குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது என அரசாங்கம் இவர்களுக்கு எச்சரிக்கின்றது. வடக்கு மக்களுக்கு உரிய வகையில் உரிமைகள் பகிரப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் பலப்படுத்தப்படும். அதை விடுத்து சட்டத்துக்கும் அரசியல் அமைப்பிற்கும் முரணான வகையில் நாட்டை சீரழிக்கும் செயற்பாடுகளை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது என்றார்.

2 comments:

  1. Min.Champika must change his racism attitudes.If he can do, all will be right. The JHU is seeing all things in racism views

    ReplyDelete
  2. No doubt he is a racist by birth.He and the present set of parliamentarians have not been taught the true history of mother Lanka.It is the shortcoming.This was well planned by the Mahavamsa believers.They twisted the whole history of the country to make the Sinhalese believe that there was no parallel kingdoms in Srilanka.Before the invation of Portugese there was a Tamil Kingdom in North that extended up to Wanni.It was the British who amalgamated the two separate Kingdoms into one for their easy administration.I pity Mr. Champika and the lot who are deprived of the true history of our mother Lanka.

    ReplyDelete

Powered by Blogger.