Header Ads



கூட்டு எதிர்க்கட்சி என்ற பதம் சட்டவிரோதமானது, பயன்படுத்துபவர்கள் குற்றவாளிகளாக சந்தர்ப்பம்

கூட்டு எதிர்க்கட்சி என்ற பதம் சட்டவிரோதமானது என்று தகவல், ஊடக, நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு அனைத்து ஊடகங்களுக்கும் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி நிமல் போபகே அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில், கூட்டு எதிர்க்கட்சி என்ற பதத்தைப் பயன்படுத்தி அதன் வளர்ச்சிக்கு உதவுவது சமூகத்துக்கு தேவையற்றதும், பாதிப்பு மிக்கதுமான முன்மாதிரியொன்றை ஏற்படுத்தி விடும்.

தற்போதைய அரசாங்கத்தில் ஆளும் தரப்பு, எதிர்க்கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்பன குறித்து தெளிவான அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆளுங்கட்சியின் ஒருசிலர் இணைந்து கொண்டு தங்களை கூட்டு எதிர்க்கட்சியினர் என்று அழைத்துக் கொள்வது பண்பாடற்றதும், சட்டவிரோதமானதும் ஆகும்.

மேலும் அவ்வாறான சொற்பதத்தை பயன்படுத்தும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சட்டத்தின் முன்னால் குற்றவாளிகளாகும் சந்தர்ப்பங்களும் நேரலாம்.

எனவே நல்லாட்சியை முன்னிறுத்தி நடத்திச் செல்லப்படும் இந்த அரசாங்கம் வழங்கியுள்ள ஊடக சுதந்திரத்தை தவறான முறையில் பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2 comments:

  1. Very good.how long will follow this matter.???

    ReplyDelete
  2. This warning should have been given long long ago.These guys have done enough damage to good governance.Give them their dues.

    ReplyDelete

Powered by Blogger.