Header Ads



இலங்கையிலிருந்து ஹஜ் செல்ல 4400 விண்­ணப்­பங்கள், முகவர்களாக செயற்பட 130 பேர் விருப்பம்

-vi-

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் முகவர் நிய­மனம் பெற்றுக் கொள்­வ­தற்­காக 130 முகவர் நிலை­யங்கள் முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு விண்­ணப்­பித்­துள்­ளன.

முகவர் நிலை­யங்­களை தெரி­வு­செய்­வ­தற்­கான நேர்­மு­கப்­ப­ரீட்சை எதிர்­வரும் 2ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது.

உயர் நீதி­மன்றம் வழங்­கி­யுள்ள ஹஜ் வழி­மு­றை­களின் (Guide Lines) படியே நேர்­மு­கப்­ப­ரீட்சை நடாத்தி புள்­ளிகள் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் முகவர் நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக கடந்­த­கா­லங்­களில் முறைப்­பா­டுகள் ஏதும் கிடைத்­தி­ருப்பின் அது கவ­னத்­திற்­கொள்­ளப்­ப­டு­மெ­னவும் முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.எச்.எம்.சமீல் தெரி­வித்தார்.

மேலும் இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக இது­வரை 4400 விண்­ணப்­பங்கள் கிடைக்கப் பெற்­றுள்­ள­தா­கவும்  ஹஜ் பய­ணத்தை உறுதி செய்­யு­மாறு 3000 விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு திணைக்­களம் கடி­தங்­களை அனுப்­பி­வைத்­துள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

கடிதம் கிடைக்­கப்­பெற்­ற­வர்கள் தமது பய­ணத்தை திணைக்­க­ளத்­திடம் உறுதி செய்­து­கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
திணைக்களம் ஹஜ் கடமைக்கான விண்ணப்பங்களை தொடர்ந்தும் ஏற்றுக்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. This government must change this business on holy hajj.

    ReplyDelete
  2. There are five pilers in Islam. Haj is the one of them.

    1. My question is why this ibadah become so popular among the agent?

    2. Why don't Muslim religious affaires take a initiative and prepare a voluntary organisations with people can guide Haj for the pligrimage. So we can get rid of middle man, making this ibada as business.

    3. If we do like this way inshaallah in future we don't have this type of competition to get Haj quota.

    4. Who ever in charge they need to work and plane to better way to make this ibadah more high spiritual, according there to ability.

    ReplyDelete

Powered by Blogger.