Header Ads



நான் அடிப்படைவாத இஸ்லாத்திற்கு, எதிராகத்தான் குரல் கொடுக்கிறேன் - டிரம்ப்


பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பது மிக முக்கியமான பிரச்சனை என்று குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட பிரச்சாரம் செய்துவரும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

இது குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு டொனால்ட் டிரம்ப் அளித்துள்ள பேட்டியில் “பாகிஸ்தான் மிக மிக முக்கிய பிரச்சனை. நமக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த நாடும் கூட. ஏனென்றால் அவர்களிடம் அணு ஆயுதம் உள்ளது. ஆனால் தற்போது பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலையை (தீவிரவாத தாக்குதல்) அந்நாடு கட்டுப்படுத்த வேண்டும். 

லாகூர் பூங்கா தாக்குதல் கிறிஸ்துவர்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கிறிஸ்துவர்கள் கிடையாது. நான் அடிப்படைவாத இஸ்லாமுக்கு எதிராகத்தான் குரல் கொடுத்து வருகிறேன். இந்த பிரச்சனைக்கு மற்றவர்களை விட என்னால் சிறப்பாக தீர்வு காண முடியும்” என்று தெரிவித்துள்ளார்.a

No comments

Powered by Blogger.