Header Ads



யாழ்ப்பாணம் + கல்முனை தொடர்பிலும் அமைச்சரவைக்கு வந்த 2 முக்கிய விடயங்கள்

கொழும்புக்கு அடுத்தபடியாக மற்றுமொரு பெரிய நகரத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நகர அபிவிருத்தி செயல்திட்டத்தினடிப்படையில்  யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் அமைச்சரவை மாநாடு இன்று ஊடக அமைச்சில் இடம்பெற்ற போதே, பாரிய நகரம் மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சர்  பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முனைவைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

 யாழ்ப்பாண நகரப் பிராந்திய தலையீடுகளுக்கான மேலதிக நிதியிடல் முறைத்திறனான நகர அபிவிருத்திச் செயல்திட்டம்  (விடய இல. 15)
 
இடம்சார் அமைவிட ரீதியில் சமநிலையான பொருளாதார வாய்ப்புக்களை பரவலடையச் செய்வதற்கும் முழுமையான பொருளாதார வசதியை விரைவுபடுத்துவதற்கும் நாட்டின் வட பகுதியில் உள்ள வறுமையை ஒழிக்கவும் உரிய செயற்பாடாக கொழும்புக்கு அப்பால் இன்னுமொரு பெரிய நகரத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது முறைத்திறனான நகர அபிவிருத்தி செயல்திட்டத்தின் நோக்கமாகும். 
 இச்செயல்திட்டத்தின் படி கொழும்புக்கு அப்பால் உள்ள யாழ்ப்பாணம் நகரத்தை அபிவிருத்தி செய்ய பாரிய நகரம் மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சர்  பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் முனைவைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கல்முனை நகரில் அமைந்துள்ள சுனாமி வீடமைப்புத் தொகுதியின் அபிவிருத்தி செய்யப்பட்ட காணியொன்றை தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு ஒதுக்கீடு செய்தல்   (விடய இல. 16)

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவினால் பாரிய அளவில் கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்களுள் ஒன்றாக கல்முனை நகரமும் இனங்காணப்பட்டுள்ளது. குறித்த பேரழிவினால் பாதிக்கப்பட்டோருக்கு வாழ்விடங்களை மீண்டும் அமைத்து அவர்களை குடியிருத்துவதற்காக அரசினால் வீடமைப்பு நிர்மாணிப்பு நிகழ்ச்சித் திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த வீடமைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், வீடமைப்பு நிர்மாணிப்பு நடவடிக்கைகளுக்கு நிதியுதவியினை பெற்று ஒதுக்கப்பட்ட காணியில் 174 வீடமைப்பு அலகுகளைக் கொண்ட மூன்று மாடி வீடமைப்புத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கு வழங்கப்பட்டது. எனினும் முறையான பராமரிப்பு முறைகள் காணப்படாமையினால் குறித்த வீடமைப்பு தொகுதி மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நியாயமான முறையில் முகாமைத்துவச் சட்டமொன்றின் கீழ் பராமரிப்பு செய்வதற்கு முனாமைத்துவ கூட்டுத்தாபனம் ஒன்றை அமைத்து வீடமைப்பு அலகுகளின் அடிப்படை வசதிகளை பராமரிப்பதற்கு இயந்திரனியல் வசதியையும் வதிவாளர்களுக்கு உறுதிப்பத்திரத்தை வழங்குவதற்கு இலகுவான முறையில் குறித்த காணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைப்பதற்கு பாரிய நகரம் மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments

Powered by Blogger.