Header Ads



'எனக்கே சுதந்திரமில்லை' - புலம்பத் தொடங்கியுள்ள மகிந்த

'எனக்கே சுதந்திரமில்லை' என முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களிடம் புலம்பத் தொடங்கியுள்ளார்.

தமக்கு சுதந்திரமில்லாத நிலையில் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரம் காணப்படுவதகத் தெரிவித்த போதிலும் உண்மையில் சுதந்திரம் கிடையாது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கப் போவதில்லை எனவும் தாமும் கூட்டு எதிர்க்கட்சியினருடன் இணைந்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிதாக அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

புதிதாக ஆரம்பிக்கப்படும் கட்சியில் சுமார் 95 வீதமான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து கொள்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் செல்லும் இடங்களில் எல்லாம் புதிய கட்சியொன்றை அமைக்குமாறு மக்கள் கோரி நிற்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியை 20 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது என்ற கருத்தை நிராகரிப்பதாகவும், தாமும் அவ்வாறு நினைத்தே ஆட்சி செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. உங்கள் ஆட்சி காலத்தில் பல பேர்களுக்கு சுதந்திடமில்லாமல் இருந்தே மறந்திடின்களோ?

    ReplyDelete
  2. MR you could say about Indipendent in the regime of My3, but in your regime it is not known what is the indipendent.
    Company of MR are not eligible persons to speak about indipendent.

    ReplyDelete
  3. MR talks like kids. If u don't have independence its your fault bt now people of slilanka live together with happy

    ReplyDelete
  4. உங்கள் ஆட்சிக்காலத்தில் உங்களைத்தவிர வேறு யாருக்குமே சுதந்திரம் இருக்கவில்லை.

    ReplyDelete
  5. உங்களை பார்த்தால் கவலையாகத்தான் இருக்கு யுத்ததை முடிவுக்கு கொண்டு வந்ததை நினைத்து,,, ஆனால் உங்கட பேராசை பிடித்த பதவி மோகம் ,இன வெறி இதனால் மக்கள் உங்களை தூக்கி வீசி விட்டது.இல்லை என்றால் சந்திரிக்காவை விட உங்களை இந்த நாட்டு மூவின மக்களும் தலையில் தூக்கி தோலால் இறக்கி சுதந்திர தினத்த்க்கு கொண்டு வந்து நிருத்வார்கள்.என்ன செய்யலாம் வயசாலயா உங்கட போக்கால.

    ReplyDelete
  6. சுந்திரம் வேனுமா பதுக்கியுள்ள பணத்தினைக்கொடுத்து வாங்கிக்கொள்ளுங்களேன்,,,,,

    ReplyDelete
  7. Samathanathukku uththam enrusolli palarin suthanthiraththai pariththa umakku ithuvum vendum innamum vendum. Nasamaipovaney!

    ReplyDelete

Powered by Blogger.