Header Ads



"சூனியக்காரன் என்ற மூடநம்பிக்கை" - உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவம் (படங்கள்)

பெற்ற பிள்ளையை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கைவிட்ட நிலையில், தொண்டு நிறுவன பெண் சேவகர் ஒருவர் சரியான நேரத்தில்  உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் கல்வியறிவு அற்றவர்களி"  எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் பல்வேறு மூடப்பழக்கங்களும் நடைமுறையில் இருந்து வருகிறது.

இதன் காரணமாக , ராசியில்லாதவர்கள், சூனியக்காரர்கள் என பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் கைவிடப்படும் பிள்ளைகள் எண்ணிக்கை அங்கு அதிகமாக உள்ளது.

அத்தகைய குழந்தைகளுக்கு கல்வியறிவு மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் தொண்டு நிறுவனம் ஒன்றின் நிறுவனராக இருப்பவர் லொவென். இவர் தனது தொண்டு நிறுவனம் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் ஒரு சிறுவன் உடலில் துணிக்கூட இல்லாமல் சாலையில் சுற்றி திரிவதை லொவென் பார்த்துள்ளார். பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருந்த அந்த சிறுவனுக்கு குடிப்பதற்கு தண்ணீர் வழங்கியுள்ளார்.

பின்னர் சூனியக்காரர் என்ற மூடநம்பிக்கையில் பெற்றோர்களும், உறவினர்களும் பிள்ளையை சாலையில் விட்டு சென்றுள்ள சம்பவம் குறித்து அறிந்துள்ளார்.

உடனடியாக அந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தற்போது மருத்துமனையில் சிகிச்சைபெற்றுவரும் அந்த சிறுவனுக்கு ஹோப்(நம்பிக்கை) என்று பெயர் வைத்துள்ளனர்.

இது தொடர்பாக லொவென் கூறியதாவது. இதைப்போன்று ஆயிரக்கணக்கான குழந்தைகள் சூனியக்காரர் என்று குற்றஞ்சாட்டப்பட்டு சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது ஹோப் குணமடைந்து வருகிறார். அவருக்கான உணவை அவரே எடுத்துகொள்கிறார். அவந் மிகவும் பலசாலியான சிறுவன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.





3 comments:

  1. I read this article in the news paper. Allah who ever doing this kind of good work, give them Your Hidaya and don't let them die as disbeliever.

    ReplyDelete
  2. ameen. I've personally seen people like this turned into much greater muslims, than many of us..while we waste our time visiting some "hair" and argue about whether to show respect or not to show respect, those new muslims do much good work being focused.

    ReplyDelete
  3. மனிதநேயம் என்பது ஒரு இனம்,மொழி,மதம், தாண்டிய மகத்துவமிக்கப்பனி என்பதை கண்டும் கானாமல் இருப்போருக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டடும்....

    ReplyDelete

Powered by Blogger.