Header Ads



யோசித்த + ஷிராந்தி குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 முதல் 20 வருடகால சிறை..?

யோஷித்த ராஜபக்ச உள்ளிட்ட சிலர் மீது சுமத்தப்பட்டுள்ள கறுப்பு பணத்தை வெள்ளையாக்கிய குற்றச்சாட்டு மேல் நீதிமன்றத்தில் நடத்தப்படும் வழக்கு விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களின் குடும்ப சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும் என தெரியவருகிறது.

பண சலவை சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு இந்த தண்டனை விதிக்கப்படும்.

யோஷித்த ராஜபக்சவுக்கு அவரது குடும்பத்தினர் சொத்தை இன்னும் பிரித்து கொடுக்காத நிலையிலும் அவருக்கு திருமணமாகாத நிலையிலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சட்டத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் ஷிராந்தி ராஜபக்ச நடத்தி வந்த சிரிலிய சவிய என்ற அரசசார்பற்ற நிறுவனத்திற்கு எப்படி பணம் கிடைத்தது என்ற பல சந்தேகமான நிலைமைகள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

சீ.எஸ்.என் தொலைக்காட்சி மற்றும் சிரிலிய சவிய அமைப்பு ஆகியவற்று வெளிநாடுகளில் இருந்து பெருந்தொகை பணம் கிடைத்துள்ளது.

அந்த பணத்தை வேறு நாடுகளில் வைப்புச் செய்து, அந்த பணத்தை இலங்கை நடத்தப்படும் திட்டங்களுக்காக அனுப்பி வைத்ததன் மூலம் வெள்ளை பணமாக மாற்ற முயற்சித்துள்ளமை தெளிவாகியுள்ளது.

பண சலவை தடுப்புச் சட்டத்தின் மூன்றாவது பந்திக்கு அமைய இந்த குற்றச்சாட்டை எதிர்நோக்கும் நபருக்கு 5 முதல் 20 வருடகாலம் வரை சிறைத்தண்டனையை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.

மேலும் மோசடி செய்யப்பட்ட பணத்தை விட மூன்று மடங்கு பணத்தை அவர்களிடம் இருந்து அபராதமாக பெற முடியும் என்பதுடன் நபர்களின் சொத்துக்களையும் அரசுடமையாக்க முடியும் என அந்த பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.