Header Ads



எண்ணெய் உற்பத்தியை முடக்கி வைத்திருக்க, 2 முஸ்லிம் நாடுகள் தீர்மானம்


எண்ணெய் உற்பத்தியை தற்போதைய மட்டத்திற்கு முடக்கி வைத்திருக்க உலகின் பிரதான எண்ணெய் உற்பத்தி நாடுகளான சவூதி அரேபியா, ரஷ்யா, கட்டார் மற்றும் வெனிசுவேலா நாடுகள் இணங்கியுள்ளன.

டோஹாவில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அண்மைய மாதங்களில் எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 30 டொலருக்கும் கீழ் வீழ்ச்சி கண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு தொடக்கம் அது 70 வீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது.

அதிக உற்பத்தியால் ஏற்பட்டுள்ள எண்ணெய் விலை வீழ்ச்சியைச் சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் செய்த எண்ணெய் உற்பத்தி அளவிலேயே தாங்கள் தங்கள் உற்பத்தியை வைத்திருக்கப்போவதாக இந்த நான்கு நாடுகளும் அறிவித்துள்ளன. ஆனால் மற்ற எண்ணெய் உற்பத்தியாளர்களும் இதே நிலையில் வைத்திருக்கும் பட்சத்தில்தான் இது அமுல்படுத்தப்படும்.

ஆனால் ஈரான் கடந்த மாதம் தன் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க விரும்புவதாக ஏற்கனவே தெளிவாக்கிவிட்டது.

இந்த கூட்டத்தின் முடிவுகள் தெரிய வந்ததும், எண்ணெய் விலைகள் மீண்டும் சரிந்தன. 

No comments

Powered by Blogger.