Header Ads



இலங்கை முஸ்லிம்களின், முதன்மைப் பிரச்சினை

-எம்.ரீ சைபுல்லாஹ்-

இலங்கை முஸ்லிம்களின் முதன்மைப்படுத்தப் பட வேண்டிய பிரச்சினை தான் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம். 25 வருடகாலமாக இன்னும் இது தொடர்ந்த வண்ணமும் உள்ளது. சுமார் ஓரு இலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கடந்த 25 வருடகாலமாக தனது சொந்த பூமியை இழந்து அகதி வாழ்கை வாழ்ந்து கொண்டிருக்கும் துர்ப்பாக்கியம், இந்த சமூகம் அகதி முகாமில் பிறந்து, அகதி முகாமில் வாழ்ந்து, அங்கே படித்து, அங்கே திருமணம் செய்து, அந்த அகதி முகாமிலேயே பிள்ளையும் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கின்ற துப்பாக்கிய நிலை முடிந்த பாடில்லை.

வடக்கில் இருந்து ஒரு சமூகமே சர்வதேச சட்ட விதிமுறையையும் தாண்டி சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்டது. ஆனால், அப்போதிருந்த அரசியல்வாதிகள் அதை சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாற்றமுட்பட்டனரா தெரியவில்லை. அவர்களது அடிச்சுவட்டை பின்பற்றும் இன்றைய அரசியல் வாதிகளுக்கும் அதேநிலையே. ஆனால், இதுவரை காலமாக இவர்கள் தமது சுய இலாப அரசியல் இருப்புக்காக வேண்டி இது வரையில் யாழ் முஸ்லிம்களது மீள்குடியேற்றப் பிரச்சினையை வெறும் பேசுபொருளாகவே பயன்படுத்தி வருகின்றனர் .

யுத்தமுடிவுக்காக வேண்டி சவுதி, ஈரான், ஈராக் போன்ற முஸ்லிம் நாடுகள் பொருளாதார ரீதியாக இலங்கைக்கு உதவின. அதே போன்று சமகாலத்தில் சில நாடுகளில் இருந்து சில இஸ்லாமிய இயக்கங்களுக்கு தமது கொள்கைகளை பரப்பும் நோக்கில் பொருளாதார ரீதியாக உதவுகின்றன. இது இவ்வாறு இருக்க அந்நாடுகளில் இருந்து பணம் பெறும் அமைப்புகள், நிறுவனங்கள் என்பன இவற்றில் கரிசனை காட்டாமல் இந்த நிமிடம் வரையில் அமைதி காக்கின்றன. அந்நாடுகள் நினைத்தால் மிக விரைவாக இப்பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

இலங்கை முஸ்லிம் அரசியல் கட்சி தலைமைகள், முஸ்லிம் தலைமை மற்றும் ஏனைய அமைப்புகளின் தலைமைகள் என்பன இவற்றில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க முட்படுவார்களாயின் நிச்சயாமாக இப்பிரச்சினையை குறிப்பிட்ட சில காலங்களினுள் முடித்துவிட முடியும். பூகோளக ரீதியாக பிரிந்திருந்தாலும் சகோதரத்துவ பிணைப்பின் அடிப்படையில் இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் இதில் கவனம் செலுத்தவேண்டிய தேவைப்பாடு உள்ளது.

No comments

Powered by Blogger.