Header Ads



மதப் பயங்கரவாதிகளால், பாகிஸ்தானியர்கள் சலிப்படைந்துள்ளனர்

வெளிநாடுகளில் போரிட பாகிஸ்தான் வீரர்கள் அனுப்பப்படமாட்டார்கள்' என அந்த நாட்டு ராணுவம் தெரிவித்தது.

 இராக்கிலும், சிரியாவிலும் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ள இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் மீது, அமெரிக்கக் கூட்டணிப் படை வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.

 இந்த நிலையில், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான தரைவழித் தாக்குதல் நிகழ்த்தவும், அதற்காக சர்வதேச கூட்டணிப் படை ஒன்றை அமைக்கவும் அமெரிக்கா பரிசீலித்து வருகிறது. அந்தக் கூட்டணியில் பாகிஸ்தானும் இணையும் எனக் கூறப்பட்டது.

 இந்த நிலையில், இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் அசீம் சலீம் பாஜ்வா கூறியதாவது:

 பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போருக்காக, ஏற்கெனவே ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் 1.82 லட்சம் வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் நிறுத்தியுள்ளது.

 இந்த நிலையில், பயங்கரவாதிகளை எதிர்த்துப் போரிட பாகிஸ்தான் எல்லைக்கு அப்பாலும் வீரர்களை நிறுத்த மாட்டோம்.

 ஐ.எஸ். பயங்கரவாதிகள் மேற்காசியாவில் செயல்பட்டு வந்தாலும், அவர்களால் உலக அளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

 எனவே, அவர்களை ஒடுக்க சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

 மதப் பயங்கரவாதிகளால் பாகிஸ்தானியர்கள் சலிப்படைந்துள்ள நிலையில், பாகிஸ்தானில் காலூன்ற ஐ.எஸ். அனுதாபிகள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை என்றார் அவர்.

No comments

Powered by Blogger.