Header Ads



புத்தளம் நகர சபை எல்லை நிர்ணயம், மேன்முறையீடு செய்யலாம்..!

(முஹமத் முஹ்ஸி) 

புதிதாக உள்ளூராட்சி எல்லைகள் வகுக்கப்பட்டுள்ளதை அறிவீர்கள். 70% வீதம் தொகுதிவாரி முறை 30% வீதம் கலப்பு முறை என்ற அடிப்படையில் இத்தேர்தல் முறை அமைந்துள்ளது. புத்தளம் நகர சபை தற்போது 11வட்டாரங்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் 11 உறுப்பினர்கள் உறுப்பினர்கள் தெரிவாவர். 30% வீதம் கலப்பு முறையின் கீழ் மேலும் 3 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.

மொத்தம் 14 உறுப்பினர்கள் புத்தளம் நகர சபைக்கு தெரிவாவர்.

இந்நிலையில் 617c மரிக்கார் வீதி கிராம சேவகர்ப் பிரிவின் கீழ் வரும் "சீமாவெளி,சேத்துப் பள்ளம்" ஆகிய பகுதிகள் மற்றும் 617 B புத்தளம் கிழக்கு கிராம சேவகர்ப் பிரிவின் கீழ் வரும் "அல்ஹசனாத் பிரதேசம், மணல்குன்று கிழக்கு பகுதி, செம்மாந்தளுவ ஆகிய பகுதிகளை உள்ளடக்கி மேலும் ஒரு வட்டாரம் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

அதே போல 618 A தில்லையடி கிராம சேவகர்ப் பிரிவு தில்லையடி வடக்கு, தில்லையடி தெற்கு என இரு வட்டாரங்களாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. என்றாலும் சனத்தொகை, வாக்காளர் தொகை என்பவற்றைக் கருத்திற் கொண்டு "தில்லையடி மத்தி" என்றும் ஒரு வட்டாரம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

ஆகவே உள்ளூராட்சி எல்லைகள் நிர்ணயம் தொடர்பில் தற்போது மேன்முறையீடுகள் ஏற்கப்படுவதால் எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பில் எழுத்து மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் முறையிடலாம்.

No comments

Powered by Blogger.