Header Ads



சாஹிராவின் பரிசளிப்பில் பங்கேற்ற மைத்திரி - இன, மத பாடசாலைகள் இயங்குவதை நிறுத்த வேண்டும் என்றார்

எதிர்வரும் காலத்தில் இலங்கையில் இன, மத அடிப்படையில் பாடசாலைகள் இயங்குவது நிறுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.
 
 1892 ஆம் ஆண்டு ஆரம்பமான கொழும்பு சாஹிரா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று (23) ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன  தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே  மைத்திரி இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

நாட்டில் அனைத்து இன மக்களிடையேயும் சகோதரத்துவத்தையும், நம்பிக்கையையும் கட்டியெழுப்ப இந்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதற்கு அடிப்படையில் இருந்தே மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதன் ஒரு கட்டமாக இன, மத அடிப்படையில் பிரித்து பாடசாலைகள் நிறுவப்படவோ, இயங்கவோ கூடாது.

எதிர்காலத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் பிள்ளைகள் ஒன்றாக கல்வி கற்கும் நிலை உருவாக வேண்டும். அதன் மூலமாக மட்டுமே நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பக் கூடியதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

குறித்த வைபவத்தில் அமைச்சர் பௌசி, கொழும்பு மேயர் முஸம்மில், பலஸ்தீனத்துக்கான இலங்கைத் தூதுவர் பௌசான் அன்வர் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.



2 comments:

  1. மைத்திரியின் கூற்று ஒருவகையில் ஜனநாயக மறுப்பாகும். காரணம் அவரவர் மதங்களையும், கலாச்சார, ஒழுக்க விழுமியங்களையும் பின்பற்றுவதற்கு உரிமையுண்டு. எனவே அவ்வாறான சூழலை உருவாக்கி கொடுக்கவேண்டுமே தவிர, எல்லோரையும் ஒரு பொதுவான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது நியாயமானதல்ல.

    உதாரணமாக, சிங்கள பௌத்த பெண்களின் தொப்புள், அடிவயிறு தெரியும் ஆடைகளை முஸ்லிம் பெண்களோ, இந்து தமிழ் பெண்களோ அணிவதில்லை. அது ஒரு ஒழுக்கம் சார்ந்த விடயமும் ஆகும். அதுவே மிகவும் ஆபாசமானதாகும். (உதாரணத்திற்கு ஒன்றை கூறுகிறேன்... இரண்டொரு வருடங்களுக்கு முன்பு ஐக்கிய நாட்டு நிறுவனங்களுக்கிடையில் நடைபெற்ற ஒரு "பால்சார்பு வன்முறைகள்" சம்பந்தமான ஒரு பயிற்சி பட்டறையில் நான் கலந்து கொண்டபோது அங்கு வந்திருந்த ஒரு அமெரிக்க கறுப்பின பெண் ஒருவர் "தாங்கள் மார்பு தெரிய அணியும் ஆடைகளை விட இலங்கை (குறிப்பாக சிங்கள) பெண்கள் அணியும் தொப்புளும் அடிவயிறும் தெரியும் ஆடைகளே அதிகம் ஆபாசமானது" என்று வாதாடினர். யதார்த்தமும் அதுவே)

    அவ்வாறே பாடசாலை என்பது வெறும் புத்தகப்பயிற்சிகளை மாத்திரம் செய்து தேர்ச்சிபெறும் இடமல்ல. ஒழுக்க விழுமியங்களையும், நல்ல பண்பாடுகளையும் கற்கின்ற, செயற்படுத்துகின்ற, மதகோட்பாடுகளை அறிகின்ற, அதன்படி நடக்கவேண்டிய ஒரு இடமாகும். எனவே அதற்கான முழுமையான சுதந்திர சூழ்நிலை காணவேண்டும். அதேநேரம், ஏனைய (மதத்த)வர்களோடு விட்டுக்கொடுப்போடும், உதவிமனப்பான்மையோடும், மரியாதையாகவும் நடந்து கொள்வதற்கான விழிப்புணர்வுகளை மாணவர்களுக்கிடையில் ஏற்படுத்த புதிய முறைகளை அறிமுகப்படுத்துவது மிகச்சிறந்ததாக அமையும்.


    ReplyDelete
  2. A message from the mouth of President like this... ? Should be taken into consideration seriously ... for their future plans.

    ReplyDelete

Powered by Blogger.