Header Ads



"மகிந்தவின் கவலை"

வடக்கு கிழக்கில் புலிக்கொடி ஏற்றப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து ஏற்கனவே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் தமிழீழ விடுதலைப் புலி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை இந்த அரசாங்கம் விடுதலை செய்துள்ளது.

வழக்கு விசாரணைகள் இன்றி இவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். இலங்கைக்கு எதிராக பிரிவினைவாதத்தை தூண்டிய அமைப்புக்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் மாவீரர் வாரமாகும். இது பலருக்கு நினைவில் இல்லை. அச்சத்தை நாமே இல்லாமல் செய்திருந்தோம்.

மனைவி, பிள்ளை, கணவன் ஒன்றாக பஸ்ஸில் செல்லாத ஓர் காலம் காணப்பட்டது.

இந்த வாரத்தில் ஒட்டுமொத்த நாட்டினதும் தேசியப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சும்மாவேனும் ஈழக்கொடியை ஏற்ற நாம் அனுமதிக்கவில்லை.

அவ்வாறான ஓர் நிலைமையை ஏற்படுத்த முடிந்தமைக்காக நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த விடயங்கள் மறந்து போவது கூட மகிழச்சியான விடயம்தான்.

கடந்த அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளர் தடை செய்திருந்த அமைப்புக்களை தற்போதைய பாதுகாப்புச்செயலாளர் தடை நீக்கியுள்ளார்.

கடந்த வாரத்தில் பொருட்களின் விலைகளை உயர்த்தி இந்த வாரத்தில் அந்த விலைகளை அராசங்கம் குறைத்துள்ளது.

இவ்வாறான காரியங்களை அவர்களினால் மட்டுமே செய்ய முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. YES, YOU ARE ABSOLUTELY CORRECT! Because still the majority of tamil community and the tamil leaders have the hope and effort for such rise of LTTE (terrorism) again. We understand from their speeches, moves, strategies, and getherings.

    Apart from past harted incidents, but WE SALUTE you for eliminated LTTE barbaric TERRORISM from this wonderful land (as Allah wished)! WE AS THE SERIOUS VICTIMS OF THAT TERRORISM, we always grateful to you. But unfortunately you started to treat us, muslims (the lovers of sri lanka) like those terrorists even we were the victims. so, we suffered much from the both side, and we prayed against to you too (as we did for LTTE) and you were punished.

    SO, IF YOU REALLY FEEL OF YOUR MISTAKES AND REALIZE THE TRUTH, we may support you, as you are a strong person than others!

    WE HATE AMERICA'S ROLE IN SRI LANKA, as we know very well of their double standard & cunning!

    ReplyDelete

Powered by Blogger.