Header Ads



பின்னூட்டம் "Comment" பதிபவர்களுக்கு, மீண்டும் நாம் ஞாபகமூட்டுவது..!

ஜப்னா முஸ்லிம் இணையத்தில் பின்னூட்டங்களை பதிபவர்கள் நாம் முன்னர் ஞாபகப்படுத்திய பல விடயங்களை மறந்துவிடுகிறார்கள்..!

அதனை இங்கு மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

வாசகர்களாகிய அணைவருக்கும் தமது கருத்துக்களை பதிவிட உரிமையுள்ளது. அதனை மதிக்கிறோம். 

அதேவேளை நாம் வாசகர் உரிமையை மதிக்கிறோம் என்பதற்காக தயவுசெய்து அதனை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள். உங்களின் பின்னூட்டங்களை ஜப்னா முஸ்லிம் இணையம் பதிவேற்றவில்லையா..? நிச்சயமாக அதற்கு ஒரு காரணம் இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

தனிப்பட்ட நபர்கள், சமயங்கள், குடும்ப விவகாரங்களை தாக்கிவரும் எத்தகைய பின்னூட்டங்களும் அனுமதிக்கப்படாது என்பதுடன்,  Jaffna-Muslim பேஸ்புக் பக்கத்திலோ அல்லது இணையத்திலோ தவறியேனும் அவ்வாறான கருத்துக்கள் இடம்பெற்றிருந்தால் தயவுசெய்து பெரும் தன்மையுடன் சுட்டிக்காட்டுங்கள். நிச்சயமாக அவை அகற்றப்படும்.

அத்துடன் ஏனைய இணையங்களின் இணைப்புக்கள் எத்தகைய காரணத்திற்காகாகவும் பின்னூட்டப் பகுதியில் அனுமதிக்கபட்டாது.

எந்த பயங்கரவாத அமைப்புக்கும் புகழ்பாடும் பின்னூட்டங்கள் முற்றுமுழுதாக நிராகரிக்கப்படும்.

உங்களின் ஒரு பின்னூட்டத்திற்கு மற்றுமொருவர் பதில் பின்னூட்டம் இடும்போதும் இது கவனத்தில் கொள்ளப்படும்.

முடிந்தளவு உங்கள் சொந்தப் பெயரில் (உங்கள் பெற்றோர் உங்களுக்கு சூட்டிய அழகான பெயர்களில்) பின்னூட்டம் பதிய முன்வாருங்கள்.

ஆரோக்கியமான கருத்துக்களுக்கு களம்கொடுத்து, உங்கள் கருத்துச் சுதந்திரத்தை மதித்து, வாசகர்களாகிய உங்களது உரிமைக்கு மதிப்புக்கொடுக்க ஜப்னா முஸ்லிம் இணையம் காத்திருக்கிறது.

தவறுகள், பிழைகளை நேர்மையான நோக்கத்துடன் சுட்டிக்காட்டுங்கள். நிச்சயமாக அதுகுறித்தும் கவனம் செலுத்துவோம்.

உங்களது உரிமை மீறப்பட்டு அல்லது உங்களுக்கு ஜப்னா முஸ்லிம் இணையத்தில் வெளியாகும் செய்திகள் எந்தவகையிலேனும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால் அதுபற்றி எங்களிடம் நேரடியாக முறையிடுங்கள்.  Skype ID  jaffnamuslim1990

அல்லது இலங்கை பத்திரிகை முறைப்பாடு ஆணைக்குழு இல்லையேல் இலங்கை முஸ்லிம் மீடியா போரத்திடம் முறைப்பாடுகளை கூறுங்கள்.

வாசகர்களாகிய உங்களுக்கு (www.jaffnamuslim.com) பக்கத்திலிருந்து எந்தவகையிலேனும் அநீதிகள் நிகழ்ந்திருக்குமாயின் நிச்சயமாக உங்களிடம் நேரடியாக பகிங்க மன்னிப்பு கேட்க எப்போதும் தயாராகவுள்ளோம்...!

யா அல்லாஹ்,  எமது நேர்மையான நோக்கங்களை ஏற்றுக்கொள்..!!

10 comments:

  1. We salute your job.....
    However, I want to ask about an article published by Haider Ali (Vada Maahaana muslimkalai, Ahadihalagave vaittirukka muyatchiya...?"
    The subject is he mentioned very much appreciated but inside the article, he mentioned some unwanted things that some of organizations are in Gulf they are supporting by funding terrorism (by several names what he knows)....
    So, in this point....what is your openion or why this points were published or are you thinking this is not a danger subject/s...?
    Kindly clarify...pls

    ReplyDelete
  2. கடமை உணர்வும் கட்டுப்பாடும் எங்கு விதைக்கப்படுகிறதோ அங்கு நன்நெறியும் நல்லொழுக்கமும் பிரதிபலிக்கிக்கும்.

    வாசகர்களின் பின்னூடகங்களை பிரசுரிப்பதும் /விடுவதும் jaffnamuslim மின் உரிமை என்றாலும் அதை பிரசுரித்ததன் பின் நீக்குவது என்பது நல்லதல்ல.நீங்கள் பிரசுரித்தன் பின் நீக்கினாள் அது உங்களின் கவனக்குறைவையையே எடுத்துக்காட்டும்.

    அல்லாஹ் உங்களின் நல்லா நோக்கங்களை ஏற்று ஈருலகிலும் வெற்றி பெற செய்வானாக ஆமீன் .

    ReplyDelete
  3. தனிமனித கருத்துச் சுதந்திரம், வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு மதிப்பளித்து, மத நிந்தனை, தனிநபர் தாக்குதல் தவிர்த்த பின்னூட்டங்களை அனுமதியுங்கள். அது உங்கள் தளத்தின் வளர்ச்சிக்கும், வாசகர்களின் அறிவு விருத்திக்கும் மிகவும் நல்லது.

    நான் இங்கே கொமன்ட் பண்ண ஆரம்பித்த பின்னர், இலங்கை இஸ்லாமியர் பற்றி பல விடயங்களை தெரிந்துகொண்டேன். அதில் முக்கியமானது, இலங்கை இஸ்லாமியர்களுக்கு ஏன் இஸ்லாமிய பெயர் கொண்ட தனிக் கட்சிகள் அவசியமாகின்றன என்கின்ற காரணமாகும்.

    மேலும், முக்கியமாக, அவர்கள் தமிழக முஸ்லிம்கள் போன்று உடனேயே பொறுமை இழக்கும் நிலையில் இல்லை, மகிழ்ச்சி, ஆனாலும் சிறிது காலத்தின் பின்னர் பொறுமை இழந்து விடுகின்றார்கள். நாம் பொறுமை இழக்கின்றோம் என்றால், நம் அறிவில் குறைபாடு உள்ளது, அல்லது நாம் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு விடயம் அவ்வாறு அல்ல, அது வேறு விதமானது என்று அர்த்தம்.

    அடுத்து, மதம் என்பது விமர்சனத்திற்கும், கேள்விக்கும் அப்பாற் பட்ட ஒன்றல்ல, மனிதன் சிந்திக்கும் ஆற்றலை பெறப் பெற்றுள்ளான், ஆகவே மதங்கள் குறித்து கேள்வி கேட்பது, நியாயமான விமர்சனங்களை முன்வைப்பது, அது குறித்து பல்வேறு கோணங்களில் கலந்துரையாடுவது போன்றவை எப்பொழுதும் மனித வர்க்கத்தின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது.

    ஒவ்வொரு தரப்பும் தமது சிந்தனையில், நம்பிக்கையில் உள்ள தவறுகளை, பிழைகளை திருத்திக் கொள்ளவும், தங்கள் சிந்தனை, தேடலை கூர்மைப் படுத்திக் கொள்ளவும் கருத்துப்பரிமாற்றம் மிகவுமே உதவும். அந்த வகையில் ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்தின் கொமன்ட் பகுதி பெரிய பங்காற்றி வந்துள்ளது.

    தொடர்ந்தும் ஜப்னா முஸ்லிம் இந்த வகையில் பூரணமான பங்களிப்பை வழங்கும் என்று நம்புகின்றேன்.

    (மதநிந்தனை என்பதற்கும், மத விமர்சனம் என்பதற்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவாக வரையறுத்துக் கொள்ளல் வேண்டும்.)

    ReplyDelete
  4. மதநிந்தனை : இஸ்லாமிய மதத்தில் குறிப்பிடப் படாத, இஸ்லாமிய மதத்தில் இல்லாத ஒரு விடயத்தை குறிப்பிட்டு, பழி சுமத்தினால் அது தெளிவான மத நம்பிக்கை ஆகும்.

    மத விமர்சனம் : இஸ்லாமிய மதத்தின் மூலாதாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள், பண்டைய, நிகழ்கால இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துக்களை முன்வைத்து கேள்விகள் கேட்பது மத விமர்சனம் ஆகும்.

    மேற்படி இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவாக வரையறுத்துக் கொண்டால், பல ஆக்கபூர்வமான கொமன்ட்கள் வீணாக அனுமதி மறுக்கப் படுவதை தவிர்க்கலாம்.

    ReplyDelete
  5. Dear Marks. Can you write the names of main Islamic Scholar or the author of books, CDs that you learnt about Islam.

    ReplyDelete
    Replies
    1. Dear Nizar

      If someone need to know about your religion then the only way either, listen a scholar or watch a CD?? What if your neighbour is a Islam person then he teach some good things about it..what if you updated by friends around.wouldn't be enough??shall appoint scholars and distribute CDS & USB.

      When someone raising a doubt every one criticise rather clarify.stand by your stance..apply for all.

      Delete
  6. ஜப்னா முஸ்லிம் நிர்வாகம்,

    கொமண்ட்ஸ் ஐ ஓரிரு மணித்தயாளங்களுக்கு ஒரு முறை சரிபார்த்து அனுமதிக்க முடியுமாக இருந்தாலம், மேலும் ஆரோக்கியமான கருத்தாடல்களுக்கு களம் அமைக்கலாம்.

    nizar, நிறைய பேர் இருக்கின்றார்கள், கிடைக்கும் ஓய்வு நேரத்தைப் பொறுத்து அது அமையும். உதாரணத்திற்கு சொல்வதென்றால், PJ, கமாலுத்தீன் மதனி, செய்யத் இப்ராஹீம், இக்பால் மதனி, அப்பாஸ், S. M. பாக்கர், டாக்டர் ஹபீப் முகமது, அப்துல்லாஹ் ஜமாலி, கலீல் அஹ்மத் என்று பல பேர் இருக்கின்றார்கள்.

    ReplyDelete
  7. முதலில் ஜஃப்னா முஸ்லிம் தளத்துக்கு என்னுடைய நன்றிகள். குறிப்பாக, வெறும் செய்தித்தளமாக மட்டும் சுருங்கிப்போகாமல் ஆரோக்கியமான விவாதங்களுக்கும் இடம் வழங்கி வருவதற்காக என்னுடைய பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    அதேவேளை, சிலரின், கெட்ட வார்த்தைகளால் பிறரைத் திட்டி எழுதப்படும் பின்னூட்டங்களைக் கூட ஜஃப்னா முஸ்லிம் தளத்தில் காணக்கிடைக்கின்றது. ஆனால் நாகரீகமான வார்த்தைகளில் மறுப்பை எழுதினால் போதும் அதற்கு பலநேரங்களில் இருட்டடிப்பு.

    இது என்ன லொஜிக் என்றுதான் புரியவில்லை..

    ReplyDelete

Powered by Blogger.