Header Ads



உள்ளுராட்சி தேர்தலில் தனித்தனியே, போட்டியிட்டாலும் ஒற்றுமையாக செயல்படுவோம் - நிமால் சிறிபால

நாட்டில் அடுத்து வருகின்ற உள்ளுராட்சி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சார்பாகவும், ஜக்கிய தேசிய கட்சி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலும் தனித்தனியே போட்டியிட்டாலும் மக்களுடைய பலத்தினை பெற்றுக்கொண்டு அபிவிருத்தி நடவடிக்கையில் ஒற்றுமையாக செயல்படுவோம், என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

தலவாக்கலை நகரில் தேசிய போக்குவரத்து ஆனைக்குழுவின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் 7 கோடி 65 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பஸ்தரிப்பிட நிலையத்தை வைபவ ரீதியாக இன்று காலை திறந்து வைத்து உரையாற்றும் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது,

தேர்தல் காலங்களில் குரோதங்கள் ஏற்பட்டாலும் தேர்தலுக்கு பின் ஒற்றுமையாகவே செயற்படுவோம்.

பயணிகள் போக்குவரத்து சேவையில் சுதந்திரமாக செயல்பட இடம் வழங்க வேண்டும், தவிர தரகர்கள் ஊடாக பயணிகளுக்கு அசௌகரிகம் ஏற்படுத்த இடம் வழங்க கூடாது என்பதை வலியுறுத்துகின்றேன்.

ஜனாதிபதி அனைத்து இன மக்களின் ஏகோபித்த தலைவராக செயற்படுகின்றார். இவரிடம் இன மத வேறுபாடுகள் இல்லை அபிவிருத்தி பாதையில் அனைவரையும் வழிநடத்தி செல்ல முனைப்புடன் செயற்படுகின்றார். இந்த நிலையில் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுள்ள நாங்கள் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவோம்.

ஜாதி மத வேறுபாடு முற்றாக ஒழிக்கப்பட வேண்டும். அனைத்து இனங்களிலும் இன வாதிகள் இருக்கின்றார்கள். அதனை இந்த நாட்டில் ஒழித்துக்கட்ட அனைவரும் ஒன்று படவேண்டும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பஸ்தரிப்பு நிலையங்கள் இல்லாமல் மக்கள் அவதியுறுகின்றனர்.

அதேபோன்று நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் இவ்வாறான பஸ்தரிப்பு நிலையங்களை அமைத்து பயணிகளின் போக்குவரத்தை சீர் செய்ய எனது அமைச்சும் உள்ள புதிய அரசும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றார்.

No comments

Powered by Blogger.