Header Ads

உங்கள் பிள்ளைகளை மத்ரஸாவில் சேர்க்கப் போறீங்களா..?

-M.JAWFER.JP-

இலங்கை முஸ்லிம்களில் மௌலவிகள் அதிகரிப்பு என்ற குற்றச்சாட்டு பெருகிவரும் இந்தக்காலத்தில் அல்லாஹ்வின் உதவியால் அதன் வளர்ச்சி அதிகப்பட்டுக்கொண்டே போகுது பாராட்டப்படவேண்டியது அல்ஹம்து லில்லாஹ். இப்போது இந்த காலகட்டம் எதிர் வரும் 2016 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை சேர்க்கும்பணியில் எல்லா அரபு மதரசாக்களும் போட்டிபோட்டுக்கொண்டு செயற்படுவதை மீடியாக்கள் மூலம் காணக்கூடியதாக இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.

 இதில் எந்த மதரசாவில் தன் மகனை சேர்த்துக்கொள்ளலாம் என்ற சிந்தனையில் பெற்றோர்கள் ஆங்காங்கு விசாரித்து பார்க்கும் காட்சிகளை பார்க்க முடியும்.இதில் அதிகமாக பெற்றோர்கள் எதிர்பார்ப்பது தன் பிள்ளை சிறந்த ஆலிமாக வரவேண்டும் தன் குடும்பத்துக்கு தீன் வழிகாட்டியாக வரவேண்டும் என்ற பேராசையில் மூழ்கியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் பெற்றோர்கள் நன்கு சிந்திக்க வேண்டிய காலகட்டம் இது. மதரசாவில் சேர்க்கும் நம் பிள்ளைகள் உன்மையிலேயே பச்ச பாலகர்கள் அதாவது பச்ச மண்ணைபோன்றவர்கள் இந்த மண்ணால் வேண்டியதை செரிக்கட்ட முடியும் என்ற பருவத்தில்தான் நம் சிறார்கள் இருக்கிறார்கள்.

நாம் சேர்த்துவிடும் மத்ரசாவில் கட்டணம் குறைவு என்பதற்காகவோ,நமக்கு போக்குவரத்து தூரமற்றது என்பதற்காகவோ அல்லது இவன் பாடசைகல்வி கற்றுக்கொள்ள லாயிக்கில்லாதவனாக இருக்கிறான் என்பதற்காகவோ,தெருச்சண்டையை வீட்டுக்கு இழுத்துகொண்டு வருகிறான்  இவனை மதரசாவில் சேர்த்தால்தான் இவன் திருந்துவான் என்பதற்காவோ அன்றி இம்மாணவன் உண்மையான தீன்தாரியாக தன்னையும் தன்குடும்பத்தையும் தனது சமுதாயத்தையும் வழிநடத்தக்கூடிய ஒரு சிறந்த உலமாவாக வர வேண்டும் என்ற சிந்தனையோடு தன் பாசத்துக்குரிய மகனை சேர்க்கும் மதரசா எவ்வாறான கொள்கையில் உள்ளது என்பதை ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.
  
இன்று சில மதரசாக்களில் ஆலிம் பட்டம் எடுத்து வரும் தன்னை ஆலிம்கள் என்று வாதாடும் ஆலிம்களை எடுத்துக்கொண்டால் பெற்றோர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு வித்தியாசமான கொள்கையும்,மார்க்கப்பற்று இல்லாமை,சரியான இஸ்லாம் பற்றி அறவே விளக்கம் இல்லாதவர்களாகவும் காணக்கூடியதாக இருக்கிறது.

ஆகவே ஒரு மதரசாவில் சேர்க்கமுன் அந்த மதரசாவில் ஏற்கனவே ஓதிய மாணவர்களை சற்று உற்று நோக்கி பார்க்க வேண்டும். அவ்வாறில்லாமல் நன்கு குளித்து விட்டு சேரில் விழுந்த கதையாக மாறிவிடும்.

இன்னும் ஒன்றை கவனிக்க வேண்டும் இம்மாணவன் உண்மையில் அரபி மதரசாவில் படிப்பதற்கு விருப்பமுள்ளவனாக இருக்கிறானா என்பதையும் பார்க்க வேண்டும் அதிகமான மாணவர்கள் பெற்றோரின்,குடும்பத்தத்தாரின் கட்டாயப்படுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு சேர்க்கப்படுவதால் அம்மாணவன் பாடசாலை கல்வியும் இழந்து மத்ரசாக்கல்வியும் இழக்க வேண்டிய நிர்க்கதிக்கு ஆளாக வேண்டிஏற்படுகிறது.இதையல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.ஏன் நாம் தன் மகனை மதரசாவில் சேர்த்தோம் என்று கவலைப்படும் பெற்றோர்களும் நம் சமுதாயத்தில் இல்லாமல் இல்லை.

சில உலமாக்களிடம் சாதாரண பாடசாலைக்கல்வி பயின்ற நேர்மையுள்ள மாணவர்களிடம் இருக்கும் பண்பு, தீன் பற்று, அல்லாஹ்வுடைய பயம், உறுதியான ஈமான் பற்று, நல்ல கொள்கைகள்,நல்ல பேச்சு திறமை,தீன் சம்மந்தமான பதிலளிக்கும் சக்தி அறவே இல்லை என்பது கசப்பான உண்மை. 

14 comments:

  1. Nalla thelivana karuthukal jazaakkallah

    ReplyDelete
  2. ஆம் மிகவும் உண்மை
    எனக்கு நேர்ந்த அனுபவம்
    நான் வேலை செய்யும் இடத்தில் மௌலவி பட்டம் முடித்த அது மட்டுமில்லாமல் இஸ்லாமிய பட்டபடிப்பு முடித்த நண்பர் ஒருவர் வேலை செய்கிறார் ஆனால் அவர் சாதாரன முஸ்லிமிடம் உள்ள மார்க தொடர்பு அற்று இருக்கிறார். குடி புகை ஹலால் ஹறாம் பேனாமை போன்ற கவலை தரும் விடயங்களில் ஈடுபடுகிறார். இவ் தகவல் மேலுள்ள கட்டுரைக்கு வலு சேர்க்கும் என நம்புகிறேன்

    ReplyDelete
  3. Miha sariyana vilakkam.
    Jazakkallah,

    ReplyDelete
  4. தயவுசெய்து எந்த மதுரசாவில் பாடசாலை கல்வி இல்லையோ அந்த மதரசாவில் உங்கள் மகனை சேர்த்து விடாதீர்கள்.குறைந்தது பத்தாம் வகுப்பு சாரி படித்த பின் சேர்கவும். முறையான அறிவும் ,ஆற்றல்,தூர நோக்கு சிந்தனயும் இல்லாமல்,ஒரு சுன்னத்தான ஒரு விடயத்தை பார்லு போன்று பயான் பண்ணி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி குழுக்களாக பிரித்தது, இந்த மதுரசசாக்களையே சாரும்.இவைகளுக்கு எல்லாம் மூல காரணம் உலகம் சார்த் அறிவு இல்லாமலே.என்பதாக நான் கருதுகிறேன்.

    ReplyDelete
  5. Not only that. There are various groups (Thawheed - already 4 known sub groups, Thablig, Jama'athe Islami, Jama'athul muslimeen, Ahlus sunnath wal jama'th and so on and so forth). The parents have to be very careful where to put the children. If rain drop falls in the good pond then it will be good, and the same falls in mud and dirty water then it will be the opposite)

    ReplyDelete
  6. Not only that. There are various groups (Thawheed - already 4 known sub groups, Thablig, Jama'athe Islami, Jama'athul muslimeen, Ahlus sunnath wal jama'th and so on and so forth). The parents have to be very careful where to put the children. If rain drop falls in the good pond then it will be good, and the same falls in mud and dirty water then it will be the opposite)

    ReplyDelete
  7. Madras have become a main source of gaining money from gulf oil rich countries for individuals and wahhabi groups in srilanka ,These pour children will be the future landmines in the community.

    ReplyDelete
  8. பிள்ளைகளுக்கு அறிவையும், கல்வியையும் வழங்குங்கள், அவர்கள் தாங்கள் பின்பற்ற வேண்டிய பாதையை தெரிவு செய்வார்கள். சிறு வயதில் மதத்தை திணிப்பது ஒரு வகையில் சிறுவர் உரிமை மீறல் ஆகும்.

    சிறு வயதிலேயே மத நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் படும் சிறுவர்கள், வளரும் பொழுது சுய சிந்தனை குரியாந்தவர்கலாகவோ, அல்லது விரக்தி மனப்பான்மை கொண்டவர்களாகவோ வளர்கின்றனர்.

    ReplyDelete
  9. I agree with Mohamed ziyath's comment.

    ReplyDelete
  10. Parents, I would further advice that you should also be careful about the type/ideology of the madrassa. You should decide on whether your child should follow the Thawheed (already 4 groups to my knowledge), Thableeg, Jama'athe Islami, Jama'athul Muslimeen, Ahlus sunnath wal jama'ath etc. etc.

    If the rain drop falls in a good well, then it will be part of the good water that will benefit to the community, and on the other hand, if it falls in the filthy and dirty canal, it will not be transformed to good one, but harmful to the community.

    ReplyDelete
  11. குறிப்பிட்ட சிலரால் சில இடங்களில் நடைபெருபவற்றை ஒட்டு மொத்த மதரசாக்களுக்கும் உலமாக்களுக்கும் உரிய பண்பாக இங்கே சித்தரிக்க வேண்டாம். ஆம் சிலர் தவறு செய்கின்றனர். அது விகிதாசார அடிப்படையில் நூற்றுக்கு 5% அல்லது 7% ஆகவோ இருக்கலாம். அல்லது அதை விடவும் குறைவாக இருக்கலாம்.

    கட்டுரையாளர்களின் கட்டுரையை பொறுத்தே Comments வைப்பவர்களின் கருத்துக்களும் இருக்கும். இலங்கை முஸ்லிம்களில் மௌலவிகள் அதிகரிப்பு என்றொரு குற்றச்சாட்டு பெருகி வருவதாக கட்டுரையாளர் ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். அவ்வாறான குற்றச் சாட்டு எங்கே பெருகி வருகின்றது ? பெருகி வந்தால் கூட உங்களுக்கென்ன பிரச்சினை ? (إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ) அள்ளாஹ்வின் அடியார்களில் அள்ளாஹ்வை அதிகம் அஞ்சுபவர்கள் உலமாக்களே என்று அள்ளாஹ் திரு குர்ஆனில் கூறுகின்றான். உலமா சமூகமே அதற்கு நேர் முரணானவர்கள் என்பது போன்று இங்கே கட்டுரையும் சில Comments உம். ?

    நபி (ஸல்) அவர்கள் மார்க்க ரீதியாகவும் ஏனைய அனைத்து துறைகளிலும் (பன்முகப் படுத்தப் பட்ட) ஒரு சமூகத்தை கட்டிஎழுப்புவதையே காட்டித் தந்து விட்டு சென்றுள்ளார்கள். ஆகவே இஸ்லாமிய ஷரீஆவைப் படித்தவர்கள் எவ்வளவு தான் இருந்தாலும் அது முஸ்லிம் சமூகத்துக்கு ரஹ்மாத்தாஹவே அமையும். ஆகவே அந்த உலமாக்களை இன்றைய சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் திறமைசாலிகளாக உருவாக்கும் விதத்தில் நவீன பாடத் திட்டங்கள் அமைக்கப் படவேண்டும் என்று எழுதுங்கள். அவ்வாறு எழுதுவது வரவேற்கத் தக்கது. அதை விடுத்து உலமாக்கள் அதிகரித்து விட்டார்கள். மதரசாக்கள் கூடி விட்டன என்பது மிகவும் பிழையான கருத்து.

    கட்டுரையாளர் சொல்வது போல் பாடசாலைக் கல்வியில் திறமையற்ற, வீட்டில் அதிகம் பிரச்சினை பண்ணுகின்ற பிள்ளைகளை மதரசாவில் கொண்டு போய் விட்ட காலம் ஒன்று இருந்ததாக நாமும் ஒருகாலம் செவியுற்றிருக்கின்றோம். 1990 களில் மார்க்க ரீதியாக மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வுடன் அந்த நிலை இல்லாமல் போய் விட்டது. நாம் 1990 களில் மதரசாக்களில் கல்வி கற்ற போதே கெட்டிக் கார , O/L திறமை சித்தி, A/L திறமை சித்தி மாணவர்கள் அதிகம் இருந்தனர்.

    ஏனைய மதத் தலைவர்கள் போன்று அவர்களின் மத வழிபாட்டுத் தளத்துக்குள்ளேயே, மக்களின் பொது விவகாரங்களில் சம்பந்தமில்லாது, திருமணம் இன்றி, துரவர வாழ்க்கை வாழ்வதை நபியவர்கள் கடை பிடிக்கவும் இல்லை. உலமாக்களுக்கு காட்டித் தரவும் வில்லை. இன்மை மறுமையின் சகல ஆகுமான விவகாரங்களிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி சமூகத்தோடு ஒன்றறக் கலந்து சமூகத்துக்கு ஈருலக வாழ்க்கைக்கும் வெற்றியளிக்கும் வழிகாட்டல்களை வழங்குவதே உலமாக்களின் பொறுப்பு. அப்படியானவர்கள் ஒவ்வொரு குடும்பத்தில் உருவானாலும் அது பெரும் பாக்கியமே. ஆகவே அவ்வாறானவர்களை உருவாக்குவோம் என்று எழுதுங்கள். அதை விடுத்து உலமாக்கள் கூடி விட்டார்கள் என்றால் ???

    பலரும் பார்க்கும் ஒரு சமூக இணையத் தளத்தில் தமது கருத்துக்களை பதிவு செய்பவர்கள் ஒன்றுக்கு 04 தடவை சிந்தித்து விட்டு கருத்துப் பதியவும்.

    ReplyDelete
  12. குறிப்பிட்ட சிலரால் சில இடங்களில் நடைபெருபவற்றை ஒட்டு மொத்த மதரசாக்களுக்கும் உலமாக்களுக்கும் உரிய பண்பாக இங்கே சித்தரிக்க வேண்டாம். ஆம் சிலர் தவறு செய்கின்றனர். அது விகிதாசார அடிப்படையில் நூற்றுக்கு 5% அல்லது 7% ஆகவோ இருக்கலாம். அல்லது அதை விடவும் குறைவாக இருக்கலாம்.

    கட்டுரையாளர்களின் கட்டுரையை பொறுத்தே Comments வைப்பவர்களின் கருத்துக்களும் இருக்கும். இலங்கை முஸ்லிம்களில் மௌலவிகள் அதிகரிப்பு என்றொரு குற்றச்சாட்டு பெருகி வருவதாக கட்டுரையாளர் ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். அவ்வாறான குற்றச் சாட்டு எங்கே பெருகி வருகின்றது ? பெருகி வந்தால் கூட உங்களுக்கென்ன பிரச்சினை ? (إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ) அள்ளாஹ்வின் அடியார்களில் அள்ளாஹ்வை அதிகம் அஞ்சுபவர்கள் உலமாக்களே என்று அள்ளாஹ் திரு குர்ஆனில் கூறுகின்றான். உலமா சமூகமே அதற்கு நேர் முரணானவர்கள் என்பது போன்று இங்கே கட்டுரையும் சில Comments உம். ?

    நபி (ஸல்) அவர்கள் மார்க்க ரீதியாகவும் ஏனைய அனைத்து துறைகளிலும் (பன்முகப் படுத்தப் பட்ட) ஒரு சமூகத்தை கட்டிஎழுப்புவதையே காட்டித் தந்து விட்டு சென்றுள்ளார்கள். ஆகவே இஸ்லாமிய ஷரீஆவைப் படித்தவர்கள் எவ்வளவு தான் இருந்தாலும் அது முஸ்லிம் சமூகத்துக்கு ரஹ்மாத்தாஹவே அமையும். ஆகவே அந்த உலமாக்களை இன்றைய சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் திறமைசாலிகளாக உருவாக்கும் விதத்தில் நவீன பாடத் திட்டங்கள் அமைக்கப் படவேண்டும் என்று எழுதுங்கள். அவ்வாறு எழுதுவது வரவேற்கத் தக்கது. அதை விடுத்து உலமாக்கள் அதிகரித்து விட்டார்கள். மதரசாக்கள் கூடி விட்டன என்பது மிகவும் பிழையான கருத்து.

    கட்டுரையாளர் சொல்வது போல் பாடசாலைக் கல்வியில் திறமையற்ற, வீட்டில் அதிகம் பிரச்சினை பண்ணுகின்ற பிள்ளைகளை மதரசாவில் கொண்டு போய் விட்ட காலம் ஒன்று இருந்ததாக நாமும் ஒருகாலம் செவியுற்றிருக்கின்றோம். 1990 களில் மார்க்க ரீதியாக மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வுடன் அந்த நிலை இல்லாமல் போய் விட்டது. நாம் 1990 களில் மதரசாக்களில் கல்வி கற்ற போதே கெட்டிக் கார , O/L திறமை சித்தி, A/L திறமை சித்தி மாணவர்கள் அதிகம் இருந்தனர்.

    ஏனைய மதத் தலைவர்கள் போன்று அவர்களின் மத வழிபாட்டுத் தளத்துக்குள்ளேயே, மக்களின் பொது விவகாரங்களில் சம்பந்தமில்லாது, திருமணம் இன்றி, துரவர வாழ்க்கை வாழ்வதை நபியவர்கள் கடை பிடிக்கவும் இல்லை. உலமாக்களுக்கு காட்டித் தரவும் வில்லை. இன்மை மறுமையின் சகல ஆகுமான விவகாரங்களிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்தி சமூகத்தோடு ஒன்றறக் கலந்து சமூகத்துக்கு ஈருலக வாழ்க்கைக்கும் வெற்றியளிக்கும் வழிகாட்டல்களை வழங்குவதே உலமாக்களின் பொறுப்பு. அப்படியானவர்கள் ஒவ்வொரு குடும்பத்தில் உருவானாலும் அது பெரும் பாக்கியமே. ஆகவே அவ்வாறானவர்களை உருவாக்குவோம் என்று எழுதுங்கள். அதை விடுத்து உலமாக்கள் கூடி விட்டார்கள் என்றால் ???

    பலரும் பார்க்கும் ஒரு சமூக இணையத் தளத்தில் தமது கருத்துக்களை பதிவு செய்பவர்கள் ஒன்றுக்கு 04 தடவை சிந்தித்து விட்டு கருத்துப் பதியவும்.

    ReplyDelete
  13. Dear Shafeek Zubair
    You have made the point correctly. We should be careful when we post the article.
    editor of the article. answer the question. where did you find the allegations against this matter.

    ReplyDelete
  14. நண்பர்களே தனிப்பட்ட ஓர் நபர் செய்யூம் தவறுக்கு முழு ஆலிம்களையூம் குறை சொல்ல வேண்டாம்

    ReplyDelete

Powered by Blogger.