Header Ads



ஜப்னா முஸ்லிம் இணையம், மீண்டும் தடை செய்யப்படுமா...?

மகிந்த ராபக்சவின் ஆட்சிக் காலத்தின் போது, இலங்கையில் jaffna muslim இணையம் தடை செய்யப்பட்டிருந்ததை வாசகர்கள் அறிந்திருப்பீர்கள்

இந்நிலையில் இன்று 09.09.2015 பல வாசகர்கள் jaffna muslim இணையத்தை தொடர்புகொண்டனர்.

அதாவது jaffna muslim இணையம் தடை செய்யப்பட்டு விடுமோ என்ற கவலையையும், அச்சத்தையும் வெளிப்படுத்தினர்.

வாசகர்களின் நியாயமான கவலையையும், அச்சத்தையும் jaffna muslim இணையம் புரிந்துகொள்கிறது.

அதேவேளை இந்த தடையிலிருந்து jaffna muslim தப்பித்துக் கொள்வதற்காக எந்த ஒரு அரசியல் வாதிக்கும் அடிபணிய நாம் தயாரில்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த சக்திக்கும் அடிபணிய வேண்டிய அவசியமும் கிடையாது என்பதுடன், எந்த அரசியல்வாதியுடனும் முறைகேடான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளவும் தயாரில்லை என்பதை உறுதியுடன் சொல்லிவைக்க விரும்புகிறோம்

11 comments:

  1. தேர்தலில் போட்டியிட்டு இருந்தால், நிச்சயம் தோல்வி அடைந்து இருக்கக் கூடிய ஒரு அரசியல்வாதி தேசியப் பட்டியல் என்னும் பின் கதவால் உள்ளே வந்த அமைச்சுப் பதவி பெற்றதற்காக நினைத்த மாதிரி ஆட முடியாது. ஜப்னா முஸ்லிம் மட்டுமல்ல, எந்த ஒரு இணையத்தளத்தின் மீது கைவைத்தாலும் பகிரங்க ஆர்ப்பாட்டம் நடக்கும். பழைய கூத்து சரிவராது.

    ReplyDelete
  2. Honest always be live with success

    ReplyDelete
  3. Jaffna muslim media is an unbiased media. This stance should be in future also. So we don't need to worry.

    ReplyDelete
  4. Ninga engal thda avanga ongala thada

    ReplyDelete
  5. இன்று இருக்கும் முஸ்லிம் சமூகம் சார் முன்னணி தமிழ் இணைய ஊடகங்களில் ஜப்னா முஸ்லிம் மட்டுமே நடுநிலையாக உள்ளது என்று புரிகின்றது. தேர்தல் பிரச்சார காலம் முடிந்த உடனேயே விளம்பரங்களை நீக்கிய முதல் ஊடகமும் ஜப்னா முஸ்லிம்தான்.

    ஆனால், தெரிந்தோ, தெரியாமலோ அசாத் சாலி குறித்து கொஞ்சம் ஓவர் கரிசனை இருப்பதாக தெரிகின்றது, அதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  6. இதற்கான வாய்ப்பு மிக மிக குறைவாகவே கருதுகிறோம். மக்களின் குரலாக Jaffana Muslim பயணிக்கும் என்பது எங்களது எதிர் பார்பாகும். எனவே மக்கள் Jaffana Muslim உடன் இருப்பார்கள்.

    ReplyDelete
  7. Bro Yaseer Neengal Hemmathagama thaane illaweettal athattukku aruhila? Enga Sendru Aarpattam Seyyaporinga Sir? Computer kku Munnadiya?

    ReplyDelete
  8. ஜப்னா இணையத்தை தடை செய்ய முடியாது.காரணம் வாசகர்கள் பெருகிவிட்டார்கள்.இவர்கள் சும்மா இருந்து விடப்போவது இல்லை.

    ReplyDelete
  9. Please use the AXE in the interest of Community.

    ReplyDelete
  10. VoiceSriLanka,

    உங்களுக்கு இலங்கையைப் பற்றித் தெரியாதா? ஹெம்மதாமையில் இருந்தோ, அல்லது அதற்கு அருகில் இருந்தோ கொழும்பிற்கோ, அல்லது நாட்டின் இன்னொரு முக்கிய நகரதிட்கோ செல்ல முடியுமா இல்லையா என்பது கூட தெரியாதா?

    ஒருவர் ஹெம்மாதகமை, அல்லது அதற்கு அருகில் என்றால், அவர் கொழும்பிலோ, அல்லது கண்டியிலோ அல்லது இன்னொரு நகரிலோ தொழில் செய்ய முடியாது என்று மட்டும்தானா உங்கள் சிந்தனை சொல்கின்றது?

    யாழ்ப்பணத்தில் குடிநீர் மாசுபடும் பிரச்சினை வந்தபொழுது, சமூக ஊடகத்தின் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டு, கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமே நடந்ததே? இதெல்லாம் கூட உங்களுக்குத் தெரியாதா.

    இதைவிட முக்கியமாக, கொழும்பு புறக்கோட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற முஸ்லிம் உணவகம் ஹெம்மாதகமை சகோதரர் ஒருவருக்கு சொந்தமானது. தெரியாவிட்டால், அதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  11. Paavam Yaseer. Mahindavin Aatchikalathil hibernation il irundaro?
    Bbs thaakkinal ilangayil irundu veru naduhalukku pohakooda bank statements ellam kekkurarhal endru sonnavar Jaffnamulimai thadai seithal Aarpattam nadathuvaram.
    By the way I like your Tamil

    ReplyDelete

Powered by Blogger.