Header Ads



சிங்கள - முஸ்லிம் கலவரம் ஏற்பட்டபோது, தீர்மானம் றிறைவேற்றியது போன்று மீண்டும்..,

ஐ நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்படுமாயின், அவர்களைக் காப்பாற்ற நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்படும் என உதய கம்மன்பில இன்று  (15) தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறுதிகட்ட போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐ நா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கை புதன்கிழமை(15.9.15) வெளியாகவுள்ளது.

'அந்த அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ள விடயங்கள் மிகவும் பாரதூரமானவையாக இருக்கின்றன' என்று ஐ நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் திங்கட்கிழமை தெரிவித்திருந்தார்.

புதன்கிழமை வெளியாகும் அறிக்கையில் இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால், இராணுவத்தினரின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி அவர்களைக் காக்கும் நோக்கில் தனி நபர் தீர்மானமொன்று நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என பவித்துரு ஹெல உறுமையவின் உறுப்பினரான உதய கம்மன்பில கூறுகிறார்.

அப்படியானத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டால், யுத்தத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் அவர் கூறுகிறார்.

சரியக நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள-முஸ்லிம் கலவரம் ஏற்பட்டபோது குற்றஞ்சாட்டப்பட்ட போலிஸ் மற்றும் இராணுவத்தினரைக் காப்பதற்கு இப்படியானத் தீர்மானமொன்றும், பின்னர் 1987ஆம் ஆண்டு கலவரங்கள் ஏற்பட்டபோதும் இராணுவத்தினரைக் காப்பாற்ற ஐக்கியத் தேசிய கட்சியின் அரசாங்கம் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன என்றும் உதய கம்மன்பில கூறுகிறார்.

4 comments:

  1. அப்போ அநியாயம் செய்பவர்களுக்கும் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டியுள்ளது.

    ReplyDelete
  2. NALLA YOSINAITHAN ANAAL NADAKKAWE NADAKKZU

    ReplyDelete
  3. People should understand this kind of politician and punish them till die

    ReplyDelete
  4. UG, this is 2015 and not 1915. international community watching us. mind your words and act like a sensible person.

    ReplyDelete

Powered by Blogger.