Header Ads



ஜனாஸா அறிவித்தல் பற்றிய குறிப்பு..!


இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள எமது வாசகர்கள், நீண்ட காலமாக விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இலங்கையர்கள் குறித்த ஜனாஸா அறிவித்தல்கள் பற்றிய விபரங்களை வெளியிட ஜப்னா முஸ்லிம் இணையம் தீர்மானித்துள்ளது.

அந்தவகையில் தமது உறவுகள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மரணிக்கும் போது, அதுபற்றிய அறிவித்தல்களை ஜப்னா முஸ்லிம் இணையம் மூலமாக முழு இலங்கைக்கும், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கும் அறிவிப்புச்செய்ய இன்று முதல் (27-09-2015) ஜப்னா முஸ்லிம் இணையம் வாய்ப்பு வழங்குகிறது.

ஜனாஸா அறிவித்தல்களை அனுப்புவோரின் கவனத்திற்கு..!

1. உங்களுடைய உறவுகள் அல்லது நெருங்கியவர்கள் குறித்த ஜனாஸா அறிவித்தல்களை மாத்திரமே அனுப்புங்கள்.

2. jaffnamuslim1990@yahoo.com என்ற ஈமெயில் முகவரிக்கு மாத்திரமே ஜனாஸா அறிவித்தல்களை அனுப்புங்கள்.

3. மரணித்தவரின் பெயர், அவரது உறவினர்கள் விபரம்,  ஜனாஸா எப்போது நல்லடக்கம் செய்யப்படும், எங்கு நல்லடக்கம் செய்யப்படும், ஜனாஸா வைக்கபட்டுள்ள முகவரி, தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் போன்றவற்றை தவறாமல் குறிப்பிடுங்கள்.

4, விரும்பியவர்கள் புகைப்படமொன்றும் அனுப்பலாம்.

5, தமிழ் மொழியில் அனுப்புவது சிறந்தது.

6, ஜனாஸா அறிவித்தலை அனுப்புபவரின் விபரம் முக்கியமானதாகும்.

7, மிகவும் நல்ல நோக்கத்தோடு முன்னெடுக்கப்படும் இச்செயற்பாட்டை, தயவுசெய்து எவரும் துஷ்பிரயோகம் செய்துவிட வேண்டாமெனவும் கேட்கப்படுகிறீர்கள்..!

முக்கிய குறிப்பு பேஸ்புக் இன்பொக்ஸில் அனுப்பப்படும் எந்தவொரு ஜனாஸா அறிவித்தலும் ஏற்றுக்கொள்ளப்படாது.

5 comments:

  1. This is one of the best service of your News for Sri Lankan Muslims all over the world. Sometime this is the quickest way to reach out some people. May Allah bless you and reward you for this good service.

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லலாஹ்,
    நல்ல வரவேற்கத்தக்க விடயம். எம் சமூகத்திலுள்ள சிலர் இதனை குறுகிய நோக்கில் பயன்படுத்த வாய்ப்புள்ளதால், நம்பகத்தன்மையை அறிவதற்கு ஏதாவது பொறிமுறை ஒன்றை ஏற்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  3. Yes kattayam proof mukkiyam

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ்.

    ReplyDelete
  5. அல்ஹம்து லில்லாஹ் மீடியா அனாதையாக இருந்த நமக்கு jaffnamuslim மின் சேவை மகத்தானது.அல்லாஹ் மென்மேலும் வளர செய்வானாக ஆமீன்.

    ReplyDelete

Powered by Blogger.