Header Ads



'இதுவும் ஓர் இற்ற கயிறாகும்' - மைத்திரி + சந்திரிக்காவை தாக்கும் டலஸ்

சில்லறை அடிப்படையில் நடைபெற்ற தேசியப் பட்டியல் மோசடி இன்று மொத்த அடிப்படையில் நடைபெற்று வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

அன்று சில்லறையாக நடைபெற்ற அந்த விடயம் இன்று மொத்த அடிப்படையில் நடைபெறுகின்றது என டலஸ் அழப்பெரும சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் வேறும் வழியில் நாடாளுமன்றம் செல்லுவதனை அரசியல் கலாசாரத்தைப் போற்றும் எவரும் அனுமதிக்க மாட்டார்கள்.

வரலாற்று காலம் முதல் தலைவர்களுக்கு இற்ற கயிறு வழங்கும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்தனர். இதுவும் ஓர் இற்ற கயிறாகும்.

இவ்வாறான பிழையான முன்னுதாரணத்தை 2004ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க வழங்கியிருந்தார்.

2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் 20400 வாக்குகளைப் பெற்றுக்கொண்டு பட்டியலில் கடைசியாக இருந்த மேர்வின் சில்வாவை, தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் கொண்டு வந்தார்.


No comments

Powered by Blogger.