Header Ads



மகிந்த + மைத்திரி தரப்புக்கள், தொடர்ந்து மோதல் நிலையில்...!!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கண்டி மாவட்ட உள்ளூராட்சி உறுப்பினர்கள் சந்திப்பு நேற்று இடம்பெற்ற வேளை, அங்கு மோதல் நிலை ஒன்று தோன்றியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தலைமையிலான இச் சந்திப்பு மத்திய மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடமபெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு நெருங்கிய தரப்பினர் கருத்து வெளியிடப்பட்டமையினால் இம் மோதல் நிலைமை தோன்றியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியுடனான பங்கு கட்சிக்கு கடுமையாக கண்டனம் வெளியிடும் வகையில் கருத்து வெளியிட்டவர்கள் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பெரிய அளவிலான தோல்வியை சந்திக்கும் என குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த தேர்தலின் போது முன்னணிக்கு வாக்களித்தவர்களில் பெரும்பான்மையினர் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் சில காரணங்களுக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வாக்களிக்காமல் இருப்பதற்கான நிலைப்பாட்டில் உள்ளனர் என கூட்டத்தின் போது சில குறிப்பிட்டுள்ளனர்.

இரு தரப்பு உறுப்பினர்களையும் அமைதிபடுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில், அதிக நேரம் செல்லும் வரையில் இச் சந்திப்பு கூச்சல் குழப்பம் நிலையில் தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2...

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மேலும் வலுவிழக்க செய்வதற்காக மஹிந்த ராஜபக்ச, விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் தலைமைத்துவத்தில் புதிய திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்திற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் தேசிய அரசாங்கத்திற்கு எதிரான உறுப்பினர்கள் முதலில் நாடாளுமன்றில் எதிர்கட்சியில் ஆசனம் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

அதன் பின்னர் அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து சுயாதினமாக பிறிதொரு முன்னணியில் செயற்பட ஆயத்தமாகின்றனர் என தெரியவந்துள்ளது. இதுவரையில் தேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 30 பேர் எதிர்கட்சியில் ஆசனம் பெற்றுகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர்களின் கையொப்பத்துடனான கடிதத்தை இம் மாதம் 22ஆம் திகதிக்கு முன்னர் கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைத்து எதிர்கட்சியில் ஆசனம் பெற்றுகொள்ளவுள்ளனர்.

அந்தக் குழுவுடன் முன்னணியின் பங்குதாரரான மஹிந்த ராஜபக்ச தரப்பினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற குழு அதனுடன் இணையவுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments

Powered by Blogger.