Header Ads



மன்னிப்பு கேட்ட விமல் - போனவை போனவையாக இருக்கட்டும் என பதிலளித்த மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மன்னிப்பு கோரியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினார்கள்.

இதன்போது தாம், தேர்தல் காலத்தில் ஜனாதிபதி தொடர்பில் பயன்படுத்திய வார்த்தைகளுக்காக விமல் வீரவன்ச, மைத்திரிபாலவிடம் மன்னிப்பை கோரினார். 

எனினும் இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போனவை போனவையாக இருக்கட்டும் என்று குறிப்பிட்டார். அத்துடன் தாம் எதிரிடை அரசியலை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்தக்கூட்டம் நேற்று காலை 8.45 அளவில் ஆரம்பமானது. இதன்போது விமல் வீரவன்சவுடன் தினேஸ் குணவர்த்தன மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் சென்றிருந்தனர்.

இந்தநிலையில் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த விமல் வீரவன்ச, தேசிய அரசாங்கத்தை அமைப்பது என்பது எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.