Header Ads



ஜனாதிபதி மைத்திரி தலைமையில் UPFA சிறுகட்சிகள் இன, மத ரீதியாக செயற்பட அனுமதிக்கப்படமாட்டாது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பை கட்டுப்படுத்த சகல வழிகளையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குழுக்களாக பிளவடைவதற்கு கிளர்ச்சி செய்வதற்கு எவ்வித சந்தர்ப்பத்தையும் வழங்காமல் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் ஒழுக்க விதிகளை மீறக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.ஒழுக்க விதிகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி கட்சிஉறுப்பினர்கள் கூட்டங்களை நடத்தக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.கட்சிக் கூட்டங்களை நடாத்த வேண்டுமாயின் கட்சியின் நிர்வாகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்து அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிறு கட்சிகள் இன ரீதியாக மத ரீதியாக செயற்பட அனுமதிக்கப்பட மாட்டாது என கூட்டமைப்பின் பதில் பொதுச் செயலாளர் விஸ்வா வர்ணபால தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவின் தலைமயின் கீழ் கூட்டமைப்பு வழிநடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. அடுத்த தேர்தலில் வெற்றி பெரும் வரை புதிய புதிய கட்டுப்பாடுகள் வந்துகொண்டே இருக்கும் .இன மத ரீதியான் செயற்பாட்டுக்கு இடம் கொத்தால் இப்போது வ்லுந்திருக்கும் இடைவெளியை அடுத்த தேர்தலிலும் இறைக்க முடியாமல் போய் விடும்.அதனால் கொஞ்சம் பொருது போகவேண்டி இருக்கு .அவளவுதான்.அதை அடியோடு அறுத்து எரிய முடியாது .

    ReplyDelete

Powered by Blogger.