Header Ads



இடம்பெயர்ந்து வரும் அகதிகளுக்கு ஆதரவாக, ஜேர்மனி ஜனாதிபதி

அகதிகளை வெறுப்பவர்களையும் அவர்களின் முகாம் மீது தாக்குதல் நடத்துபவர்களையும் சகித்துக்கொண்டிருக்க முடியாது என்று ஜேர்மனி ஜனாதிபதி ஏஞ்சலா மேர்கல் கூறியுள்ளார். 

கடந்த வெள்ளியன்று ஜேர்மனியின் தேசிய ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் ஜெர்மனியின் ஹெய்டெனே பகுதியில் உள்ள அகதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல் கலவரமாக மாறியது. பின்னர் பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரக்காரர்களை விரட்டியடித்தனர்.

இந்த கலவரத்துக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அங்கு அகதிகளுக்கான புதிய குடியிருப்புகளை திறந்துவைப்பதற்காக ஜனாதிபதி ஏஞ்சலா மேர்கல் இன்று வந்துள்ளார்.

அங்கு திரண்டிருந்த எதிர்ப்பாளர்கள் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பின்னர் அகதிகளுக்கான குடியிருப்புகளை திறந்துவைத்து அவர் பேசியதாவது, இந்த ஆண்டு ஜேர்மனியில் 8 லட்சம் அகதிகள் வரை தஞ்சமடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மற்ற நாடுகளை விட அதிகம். மேலும் மற்றவர்களின் கவுரவத்தை பற்றி கேள்வி எழுப்புகிறவர்களையும் ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய விருப்பமில்லாமல் இருப்பவர்களையும் சகித்துக்கொண்டிருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் அகதிகளை எதிர்ப்பவர்கள் இழிவானவர்கள் என்றும் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.