Header Ads



மயிலின் ஆட்டம், களைகட்டியுள்ளது - கலாநிதி இஸ்மாயில்

-எம்.வை.அமீர்-

நடைபெறவுள்ள பாராளமன்ற தேர்தலுக்கு முகம்கொடுக்கவுள்ள நான், தென்கிழக்கு அலகில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் சவால்களை முடிவுக்குக்கொண்டுவரும் எனது வேலைத்திட்டத்தின் கீழ் என்னால் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள வேலைத்திட்டங்கள் அடங்கிய கொள்கைப் பிரகடனத்தை வெளியிடவுள்ளேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் 2015-08-01 ம் திகதி சம்மாந்துறையில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் எமது மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளமன்றம் சென்ற சில பாராளமன்ற உறுப்பினர்கள் இப்பிராந்திய மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வில்லை என்றும் பிராந்தியத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடனேயே தான் இத்தேர்தலில் களமிறங்கியுள்ளதாகவும் பல்கலைக்கழக உபவேந்தராக இருந்த காலத்தில் ஒரு அரசாங்க உத்தியோகத்தராக இருந்து கொண்டு பல்கலைக்கழகத்திலும் வெளியேயும் பல்வேறு அபிவிருத்திகளை செய்து காட்டியுள்ளதாகவும் மக்கள் ஒரு சந்தர்ப்பம் தருவார்கள் என்றால் இதைவிட பலமடங்கு அம்பாறை மாவட்டத்திலும் ஏன் முழு நாட்டுக்கும் தன்னால் சேவையாற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.

நீண்ட காலமாக சிறந்த ஒரு வேட்பாளர் இல்லாததன் காரணமாக சம்மாந்துறை தனக்கான பாராளமன்ற உறுப்பினரை இழந்து வருவதாகவும் அந்த வெற்றிடத்தை தன்னால் நிரப்ப முடியும் என்றும் தனது பின்னால் நாளாந்தம் அலையலையாக மக்கள் திரண்டுவருவதாகவும் தெரிவித்தார்.

இப்போது ஏற்பட்டுள்ள சிறந்த வாய்ப்பை சம்மாந்துறை மக்கள் உட்பட அம்பாறை மாவட்ட மக்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட இஸ்மாயில், அம்பாறை மாவட்டம் முழுவதும் மயிலின் ஆட்டம் களைகட்டியுள்ளதாகவும் தங்களுக்கு ஒரு உறுப்பினரைப் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்கனவே ஏற்பட்டு விட்டதாகவும் அடுத்த உறுப்பினரை பெற முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

4 comments:

  1. இஸ்மாயில் அவர்களே, நீங்கள் A/L படித்தீர்கள் ஆனால் இலங்கையில் எந்த பல்கலை கழகமும் அனுமதி கிடைக்க வில்லை ரசியா சென்று ( வியாபாரம் செய்தீர்கள், பல கூத்தடித்தீர்கள் ) பட்டம் வாங்கினீர்கள். இலங்கை வந்தீர்கள் வேறு அரச உத்தியோகம் கிடைக்க வில்லை உங்களது அதிர்ஷ்டம் மறைந்த தலைவரின் முயற்சியால் தென்கிழக்கு பல்கலை கழகம் ஆரம்பிக்கப்பட்டது, இரண்டாவது அதிர்ஷ்டம் அன்று உபவேந்தர் காதர் sir, பதிவாளர் ஜாபர் சாதிக் sir இருவரும் சம்மாந்துறையை சேர்ந்தவர்கள் பிறகு என்ன விரிவுரையாளர் ஆனீர்கள். அதாவுல்லா போன்ற அரசியல் வாதிகளின் அனுசரணையுடன் உப வேந்தர் ஆனீர்கள். இந்த காலப் பகுதியில் உங்கள் சக விரிவுரையாளர்களால் பல ஊழல் குற்ற சாட்டுக்குள் உங்கள் மீது சுமத்தப்பட்டது என்பது வேறு கதை ( இச் செய்தி Jaffana Muslim இலும் பதிவாகி இருந்தது ). இப்போது அரசியலுக்கு வந்துள்ளீர்கள். நல்லது கேட்டது பேசப்படும்.

    எமக்கு ஒரு கவலை முஸ்லிம்களின் ஒற்றுமை, அரசியல் பலம், போன்றவிடயங்கள். ரிசாத் பதுர்தீன் அவரது அரசியல் பயணம், அவர் முஸ்லிம்களின் அரசியல் பலத்தை, ஒற்றுமையை தகர்தேரிவதட்காக பேரின கட்சிகளின் முகவராக ஊக்கப் படுத்தப்படுவதும், பல சலுககைகள் பெற்றுகொள்ளப்படுவதும் நாடறிந்த உண்மை. ஏன் உங்களுக்கு இது புரிய வில்லை. உங்களது சுயநலத்துக்காக சமூகத்தை பலிகொடுக்க வேண்டாம் என தயவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

    அரசியல் என்பது உங்களுக்கு சூனியம் என்பது, நீங்கள் ஜமீளினதும் ரிசாத்தினதும் கவுத்தை விழுங்கியதில் இருந்து தெளிவாக தெரிகிறது. அம்பாறை மாவட்டத்தின் வாக்கு விகிதாசாரமும் முஸ்லிம் காங்கிரசின் ஆகக் குறைந்த வாக்குகளும், பெரும்பான்மை சம்மாந்துறை மக்களின் அரசியல் உணர்வுகள் போன்ற விடயங்களை சற்று சிந்தித்து பாருங்கள், அப்போது உங்கள் நிலைமை புரியும். எனவே தயவு செய்து பாமர மக்களை பிழையாக வழிநடத்த வேண்டாம் என தயவாய் கேட்டுக் கொள்கிறோம்.

    ReplyDelete
  2. 18m thikathi varai allam sollunkal.19m thikathi oomayai erukanum.dont forget sir.

    ReplyDelete
  3. பதவி ஆசை இல்லை என்றால் ஏன் வாக்கு கேட்டு பிச்ச கேட்டு திரியனும்.மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றால் மந்திரி ஆகித்தான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.நீங்கள் உபவேந்த்தர் பதவியே வைத்தே சிறந்த சமூக சேவை செய்து சிறந்த கல்விமான்களை உருவாக்கி இருக்க முடியும் அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் கட்சி பேதம் இன்றி சகல அரசியல்வாதிகளும் உங்களுக்கு ஆதரவு தருவார்கள்.ஆனால் உங்களின் பதவி பேராசை அதை விட்டும் தடுத்து விட்டது. எப்படியோ இம்முறை தேர்தலில் நீங்கள் அடையும் தோல்வி வாழ்க்கையில் இனிமேல் தேர்தலைப்பற்றி நினைத்து கூட பார்க்க மாட்டீர்கள்.

    ReplyDelete
  4. தம்பி உப வேந்தர் பதவி ஒருவருக்கு இரான்டுதரம்தான் Two terms 3X2=6 years completed கொஞ்சம் அறிவை கூட்டிக்க முயற்ச்சிபண்ணுங்கப்பா

    ReplyDelete

Powered by Blogger.