Header Ads



அரசியல் வாழ்க்கை, இந்தத் தேர்தலுடன் முடியப்போகின்றது - ஹக்கீம்

அம்பாறை மாவட்டத்தில்  ஐக்கிய தேசிய கட்சியை பலவீனப்படுத்த முயற்சிக்கும்  ரிசாத் பதியுதீனுக்கு ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் தேசிய பட்டியல் ஆசனங்களை வழங்கமாட்டார். மஹிந்தவை பிரதமராக்குவதற்குத் திட்டமிட்டுள்ள ரிசாதுக்கு முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் பாடம்புகட்டுவர் என்று அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவுப் ஹக்கீம் தெரித்துள்ளார்.

நேற்றிரவு பொத்துவிலில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.அவர் அங்கு மேலும் கூறுகையில்,

எமது வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் எம்மீது தாக்குதல் நடத்த முற்படுகின்றனர்.இந்தப் பிரதேசத்தில் உள்ள எலிகள் எல்லாம் தங்களைப் புலிகளாக நினைத்துக் கொண்டு இருக்கின்றனர்.அவர்களின்  சலசலப்புகளுக்கு நாம் அஞ்சமாட்டோம்.

இன்று இப்போது இந்தக் கூட்டத்தைக் குழப்ப அவர்கள் முயற்சித்தனர்.இது ஒன்றும் எமக்குப் புதிது அல்ல.தலைவர் அஷ்ரபின் காலத்தில் 1994 ஆம் ஆண்டும் இப்பகுதியில் இவ்வாறு இடையூறு விளைவித்தனர்.இவையெல்லாம் எமக்கு மிகவும் சாதாரண விடயங்கள்.இவற்றுக்கெல்லாம் நாம் பயப்புடப்போவதில்லை.

முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடித்து மஹிந்தவைப் பிரதமராக்குவதற்கு ரிசாத் கட்சியினர் முயற்சி செய்கின்றனர்.அதற்கு முஸ்லிம்கள் ஒருபோதும் இடங்கொடுக்கமாட்டார்கள்.

ரிசாத் பதியுதீனின் கட்சிக்கு தேசிய பட்டியல் ஆசனங்களை ரணில் விக்ரமசிங்க வழங்குவார் என அவர்கள் கூறித் திரிகின்றனர்.அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியை பலவீனப்படுத்த முயற்சிக்கும்  ரிசாத் பதியுதீனுக்கு ரணில் விக்ரமசிங்க ஒருபோதும் தேசிய பட்டியல் ஆசனங்களை வழங்கமாட்டார்.

அம்பாறை முஸ்லிம்கள் இந்தப் பொய்களை நம்ப வேண்டாம். சதிகாரர்களை தோற்கடிக்க வேண்டும்.முஸ்லிம்களால் தோற்கடிக்கப்பட்ட மஹிந்தவின் முகவர்களான இவர்கள் இந்த சமூகத்தின் துரோகிகள் ஆவர்.

இவர்களின் அரசியல்  வாழ்க்கை இந்தத் தேர்தலுடன் முடியப்போகின்றது.முஸ்லிம் காங்கிரசை எதிர்த்துக் கொண்டு அரசியல் செய்த-அந்தக் கட்சியை அழிக்க முயற்சித்தவர்களை இந்த மக்கள் அரசியலில் இருந்தே விரட்டிவிட்டனர்.அந்த வரலாறு தொடரும்.

உருவாகப் போகும் புதிய அரசில் நாம் 10 ஆசனங்களுடன் மிகவும் பலமான நிலையில் இருப்போம்.வரலாறு காணாத அபிவிருத்தியை மேற்கொள்வோம்.

மஹிந்தவின் அரசில் எம்மை அபிவிருத்தி செய்யவிடாமல் தடுத்த அந்த யுகம் எமது ஐக்கிய தேசிய கட்சி அரசில் ஏற்படாது.பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். என்றார்.

இதனைத் தொடர்ந்து சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஹக்கீம்,சாய்ந்தமருதுவுக்கு பிரதேச சபை வழங்கப்படும் என்ற தனது வாக்குறுதியில் எந்த மாற்றமும் ஏற்படாது எனக் கூறினார்.

இது தொடர்பில் நாடாளுமன்றில் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தபோதுதான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என்று அங்கு அமைச்சர் கூறினார்.

இருப்பினும்,புதிய ஆட்சியில் இந்த முயற்சி தீவிரப்படுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார். 

4 comments:

  1. நீங்கள்தான் விழகப் போறிங்களோ என்று சந்தோசப்பட்டேன்

    ReplyDelete
  2. Rauf Hakeem has forgotten that he and Risad Bathidueen got together and tried to cheat Muslims in Uva Province in the last provincial election and they failed. Now Rauf Hakeem is talking nonsense. Both the leaders are the same in terms of policies and tried to cheat the Muslim Community in the General Election.

    ReplyDelete
  3. This is the master plan from basil to 2 persons.hakeem and rushard may be dealed for big amount?muslims should vote for only UNP SINHALA condidates.this is best for our society.last10years this leaders did nothing for our muslims.better to go home for coming 5years.then only this people will learn.muslims should vote like last president election.

    ReplyDelete
  4. neenka solwathaiyllamm ...... keattu ...kaithattaiya kalamumm.....kooookkurall itta kalamumm..... poitaiyyaaaa.... muthal la ....neeennnka santharpppawathiya illlama.... oru nalla manithana irunthu,,, onka kudumpathuku mattum.... nalla thaa sainkaiyaaaa...... poankaiya .... neeenkalummmm... unkadaa.. political kathiyu............ th,.....

    ReplyDelete

Powered by Blogger.