Header Ads



''ஹஜ்ஜுக்கு போகும் நம் சகோதரர்களிடம்...''

بسم الله الرحمن لرحيم

اسلام عليكم 

-M.JWFER JP-

இன்ஷா அல்லாஹ் இம்முறை ஹஜ்ஜுக்கு போகும் நம் சகோதரர்களிடம் நான் சில விடயங்களை பகிர்ந்துகொள்ள விரும்பி இதனை எழுதுகிறேன். பிழைகள் இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுமாறு முதலில் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் ஹஜ்ஜில் சில விடயங்களை அவதாநிக்கக்கூடியதாக இருக்கிறது.ஹஜ்ஜுடைய முதல் நாளான அரபாவுடைய நாளில் சூரியன்மறைந்த பின் அதாவது மக்ரிப் வுடைய நேரம்,அரபா மைதானத்தை விட்டு வெளியேறி முஸ்தளிபாவை நோக்கிப்புரப்படுகிறோம் நமக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது மக்ரிபுடைய தொழுகையை முழஸ்தளிபாவுக்கு வந்து மக்ரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் ஒரு பாங்கும் இரண்டு இகாமத்துமாக மக்ரிப் மூன்று ரக்காத்தும் இஷா இரண்டு ரகயத்தும் இரண்டு சலாமாக தோழ வேண்டும்.நாம் எத்தனைமணிக்கு முஸ்தலிபாவுக்கு வருகிறோமோ அந்த நேரத்தில்தான் இந்த இரண்டு தொழுகைகளையும்தொழ வேண்டும் என்று நமக்கு கூறப்பட்டுள்ளது.

இதுதான் நபிவழி. ஆனால் நம்மவர்கள் அரபாவில் இருந்து வரும் வழியில் மக்ரிபுடைய தொழுகையை அரபாவுக்கும் முச்தளிபாவுக்கும் இடையில் தொளுதுகொல்கிரார்கள். இது நபிக்கு மாற்றமான செயல்.அடுத்து சுன்னத்தான தொழுகைகள்.விடயமாகவும் பல தப்புகள் நடைபருவதை காணக்கூடியதாக இருக்கிறது.ஹஜ்ஜுடைய காலத்தில் பர்லான தொழுகைகளை சுருக்கியும் சேர்த்தும் தொழவேண்டும் அதுதான் நபிவழி ஆனால் நம்மவர்கள் சிலர் சுரிக்கித்ததொலாமலும்.

லுகார் நான்கு ரகத்துகள் அசர் நான்கு ரகத்துகள் மக்ரிப் மூன்று +ரகத்துகள் இஷா நான்கு ரகத்துகளும் தொழுதுவிட்டு முன்பின் சுன்னத்துகளும் தொழுகிறார்கள்.இவர்களின் ஆசை என்னவென்றால் புனிதமான இடங்களாக இருக்கிறதால் நாம் கூடுதலாக தொழுது நன்மைகளை பெற்றுக்கொள்வோம் என்ற ஆசை.இது மிகப்பெரிய தப்பு. ஹஜ்ஜுடைய கிரியைகள் அனைத்தும் அல்லாஹ் மலக்குகள் மூலம் நபி (ஸல்)அவர்களுக்கு கற்றுக்கொத்து இருக்கிறான் அதன் அடிப்படையில் ஹஜ்ஜை சையுமாருதான் நமக்கு நபியவர்கள் கட்டளை இட்டுள்ளார்கள். இவ்விடத்தில் நாம் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும் ஹஜ்ஜுடைய காலத்தில் ஹஜ்ஜாஜிகள் படும் கஷ்டங்கள் பாரதூரமானவை.இவைகள் அனைத்தையும் அறிந்த வல்ல அல்லாஹ் இவ்வாறான இலேசான வழிமுறைகளை நமக்கு நபிமூலம் கற்றுத்தந்துள்ளான்.ஆகவே இந்த இடத்தில் சுன்னத்தை விடுவதுதான் நபிவழி சுன்னத்தாக அமையும் மாறாக இவ்விடத்தில்  இவ்வாறான விடயங்களை நாம் செய்யும்போது அது பித்அத்தாகத்தான் மாறுபடும்.நபி சொல்வதுதான் வணக்கம் அதைத்தான் நாம் செய்ய வேண்டுமே தவிர நாம் நம் இஷ்டத்துக்கு செய்ய முடியாது. 

அடுத்து அளவுக்கதிகமாக உம்ராக்களை செய்வது இவ்வாறு செய்வதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை.நாம் அளவுக்கதிகமாக செய்யும்போது  முதல் முறையாக உம்ரா செய்யும் ஹஜ்ஜாஜிகளுக்கு இடைஞ்சலாக இருக்கும் ஹரம்ஷரிப்பில் நெருக்கடியான நினை ஏற்ப்படும் என்பதையல்லாம் நாம் கவனத்தில் கொள்வதோடு நமக்கும் அது சிரமமான காரியம்தான் நபியவர்களும் ஒரு உம்ரா செய்ததாகத்தான் நாம் அறிகிறோம் அவ்வா ரன்றால் நாமும் ஒரு உம்ரா செய்வதுதான்  நல்லது. இந்த விடயங்களில் ஹஜ்ஜாஜிகளை வழிநடத்தும் வழிகாட்டிகள்.மிகக்கவனமாக வழிநடத்த வேண்டும்.ஹஜ்ஜுக்கு போகும்  ஹஜ்ஜாஜிகளுக்கு இந்த விடயங்களில் போதிய விளக்கம் இல்லை அவர்கள் அப்பாவிகள் ஆசையில் எல்லாம் நல்லமல்தான் என்று பித் அத்தான வழிகளில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது.இதுசம்மந்தமான விளக்கங்களை உலமாக்கள் விளங்கப்படுத்த வேண்டும்.

அடுத்து கல்லறியும் இடத்தில்  சாதாரணமாக ஒரு ஆட்டு புளுக்கையின் அளவு உள்ள கல்லைத்தான் நாம் பாவிக்க வேண்டும் அவ்வாறில்லாமல் பெரும்கற்களை கொண்டு வீசியரிவது சருப்பால் எரிவது போன்ற பல விடயங்களை கவனிக்க முடிகிறது இது முற்றாக தடுக்கப்பட வேண்டிய ஓன்று.

அடுத்து கல்லறியும் இடத்திலும் தவாப் செய்யும் ஹரம் ஷரிப் உட்பகுதிகளிலும் நாம் மிகக்கவனமாக இருக்க வேண்டும் இந்த இடங்களில் நாம் நம்ப முடியாத அளவுக்கு கள்வர்களின் நடமாற்றம் இருக்கிறது.இது உங்களுக்கு புதிய செய்தியாக இருந்தாலும் உண்மை இதுதான்.அல்லாஹ்வின் அன்பை நாடி நாம் நம்மை மறந்து நம்முடைய பொறுக்கல் பெஸ்கள் பாஸ்போர்ட் பணம் என்பவற்றின் கவனம் நம்மை விட்டு மறைந்திருப்பதால் கொள்ளையர்களுக்கு பெரும் சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்.விஷேசமாக ஹஜ்ருல் அஸ்வத் கல்லை முத்தமிடும் இடத்தில் கடுமையான நெருக்கடியாக இருக்கும்அவ்விடத்தில் இவர்களின் கைவரிசையை காட்ட ஆரப்பிப்பார்கள்.

இவ்விடத்தில் மிகக்கவனமாக இருக்க வேண்டும்..நம் சாமான்களை நாம் பாதுகாப்பதில் மிகக்கவனமாக இருக்க வேண்டும்.நம்முடைய மனதில் இது ஹரம் அபயமளிக்கப்பட்ட இடம் நாம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று உண்மைதான்.ஆனால் சில அசம்பாவிதங்கள் நடைபருகிறது.அதற்க்கு நாம் ஆளாகி விடக்கூடாது.வல்ல அல்லாஹ் இவ்வாறான கெட்ட விடயங்களில் இருந்து ஹஜ்ஜாஜிகளை பாதுகாத்து அவர்களின் ஹஜ்ஜை ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்கி அருள் புரிவானாக நமக்கும் நம்குடும்பத்துக்கும் ஹஜ்ஜு செய்ய சந்தர்ப்பத்தை ஏற்ப்படுத்தி தந்தருள்வானாக ஆமீன் .   
  

3 comments:

  1. THAW KAARANUWAL POTHTHIK KONDU IRUNDAAL POADUM. Ella hadj grouplayum walikaattikal undu. Kulappawadikal poduwaana idangalil updesam seyyawendaam Allahwukkaake. Dua etrukkollappadum idamgalil iwanuwalda waayadnguwadatkhakaha .......

    ReplyDelete
  2. சகோதரர் NIZAR அவர்கள் சம்மந்தமில்லாமல் மூனாவதாக தவ்ஹீத்வாதிகளை வம்புக்கு இழுக்கிறார்.சில வழிகாட்டிகளும் வழிகேடர்கள் உண்டு என்பதை சகோதரர் புரிந்து கொள்ள வேண்டும்.பின்னூட்டங்களை நாகரிகமாக எழுத வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. pinnoottallil nahareeham edirparkum neengal yen anda tamil naattil ulla unga madhabudayya imamukku Sahabaakkal visiyatthil nahereehamaahe nadakka solla elaadadu

      Delete

Powered by Blogger.