Header Ads



'மிதிவண்டி ஒட்டுதல்' உடலுக்கும், உள்ளத்துக்கும் பாதுகாப்பு...!

(மு.இ. உமர் அலி)

பயன்தரும் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு  பரபரப்பான வாழ்க்கைக்கு கிராமங்கள்  மாறிவிட்டன.இன்று நம்மிடமிருந்து மறைந்து போயுள்ள ஒரு சிக்கனமானதும்,இலகுவானதுமான போக்குவரத்து சாதனம்  சைக்கிள் ,காலத்தின் சுழற்சிக்கேட்ப நாம் முன்னேறி முழுவதுமாக நவீனமடைந்துவிட்டோம்.பழையதில் பாதி கூட இல்லாதளவு தூரமாகி விட்டோம்   நமக்கு நாகரீகம் அறிமுகப்படித்தியது நோய்களையும் மாத்திரைகளையும்,,நிம்மதியற்ற  மனங்களையுமே! அசுர வேகத்திற்கு அடிமையான மனிதன் ,தனது நேரத்தின் உபயோகத்தை  அதிகரிக்க நினைத்தான்.அறிவியலின் உச்ச பயனை அடையத் துடித்தான் வெற்றிக்கனிகளையும் சுவைக்கின்றான் .அவற்றில் சில புளிக்கின்றன ,சில சுவையே இல்லை,சில பலருக்கு எட்டாத பழங்கள் .

நமது சமூகத்தை  பெருமளவு  மோட்டார் வாகனங்கள் ஆக்கிரமித்திருக்காத நாட்களில்.................ஒருவருடைய  வாழ்க்கையில்  துவிச்சக்கர வண்டி/பைசிக்கில்கள்  எவ்வாறு இடம்பிடித்திருந்தன? என்பதை சற்று சிந்தனைய பின்நோக்கி செலுத்தும்போது  தெளிவாக பல  விடையங்களை அறிந்தும் தெரிந்தும் கொள்ளலாம்.

இன்று நகரங்களில் ஒரு உடற்பயிற்சி சாதனமாக நோக்கப்படுகின்ற துவிச்சக்கர வண்டிகள்/பைசிகில்கள்  அன்று அன்றாட தேவையின் அத்தியாவசியமாக இருந்தது,இன்று அந்நிலை மாறி விட்டது .நடக்கக்கூடிய தூரத்திற்குகூட நாம் இப்பொழுது ஆசைக்கும் நடப்பதில்லை."நாங்க கல்முனையிலிருந்து கிளிநொச்சிக்கி வெள்ளாமை வெட்ட சைக்கள்லதான் போவோம்"மட்டக்களப்புக்கு படம் பார்க்க சைக்கள்லதான் போய் வரும்வோம் என்று நமது முதியோர் சொல்ல கேட்டிருக்கின்றோம்.

இப்போதெல்லாம் எல்லாவற்றிற்கும்  பெட்ரோலையும் டீசலையுமே  முதலீடு செய்கின்றோம்.அவ்வாறு பெட்ரோலிலும் டீசலிலும் தங்கி வாழும் நாம் ஏன் சில நிமிடங்களை தினந்தோறும் இந்த இலாபகரமான முயற்சியில் முதலிடக்கூடாது? எரிபொருள் தேவையற்ற ,சூழலை மாசுபடுத்தாத,உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்ககூடிய பைசிக்கில்களை பயன்படுத்த முடியாது?

பைசிக்கிள் ஒட்டுவதானால் தனிமனிதனும்,அவன் சார் சமூகமும்மட்டுமன்றி முழு உலகுமே  பயனடையும் என்பதனை சற்று விளக்கமாக கூற முனைகின்றேன்.

இன்று நம்மில் அதிகமானவர்கள் காரியாலயங்களில்   வேலை செய்கின்றோம் போதியளவு உடற்பயிற்சி செய்வதில்லை செய்ய நேரமுமில்லை,இதனால் உடலில் கோலேஷ்டேரோல் ,உயர்குருதியமுக்கம் ,உடல்பருமன் போன்ற  நிலைகளிற்கு விரும்பியோ விரும்பாமலோ அடிமையாகி விடுகின்றோம் இந்நிலையிலிருந்து விடுபட நாம் வைத்தியர்களை நாடி,மணிக்கணக்கில் காத்திருந்து அதிகமான பணத்தையும் விரயம் செய்கின்றோம்.

பைசிக்கிள் எங்கும் ஓடலாம்,எப்பொழுதும் ஓடலாம்,மழையிலும் வெய்யிலிலும் ஓடலாம்,விசேடமான பயிற்சி எதுவும் தேவையில்லை சாதாரண உடல் நிறையுடைய வளர்ந்த ஒருவர் ஒரு மணித்தியாலத்திற்கு தொடர்ச்சியாக பைசிக்கிள் ஓடினால் 500 தொடக்கம் 600 வரையிலான  கலோரிகள் உடம்பிலிருந்து எரிக்கப்படுகின்றன.

உடலின் கீழ் அவயவங்களுக்கும் இடுப்பு வளையத்திற்கும் சிறந்த உறுதியையும்,பலத்தையும் வழங்குவதுடன் முழங்கால் மூட்டின் அசைவையும்  சீராக்கி நாம் உலகில் நலமாக நடமாட   துணை புரிகின்றது. மட்டுமன்றி  உடலிற்கு ஒரு புத்துணர்ச்சியை வழங்குகின்றது. கீழ் அவயவத்தின் தசைகள் சைக்கிள் ஓடும்போது பயன் படுத்தப்படுவதால் சீரான குருதி வழங்கல்  தேவைப்படுகின்றது அதன் நிமித்தம் இதயம் சீராக இயங்கவேண்டியுள்ளது இவ்வாறு இதயம் சீராக இயங்கத்துவங்குவதால் ,இயக்கம் சீராகி இதயத்தின் உறுதித்தன்மை(CARDIO VASCULAR FITNESS ) 3-7% அதிகரிக்கின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றன.பிரிட்டிஷ் மெடிக்கல் அசொசியாசென்  (BRITISH MEDICAL ASOCIATION)நடாத்திய ஆய்வொன்றிலிருந்து  "வாரத்திற்கு 20 மைல் பைசிக்கிள்  ஓடுபவர்கள்  இருதய நோய்களால் தாக்கப்பட்ட ஏனையவர்களுடன் ஒப்பிடும் பொது 50% குறைவாகவே  இதய நோய்களிற்குள்ளகின்றனர் "என்று கண்டுபிடித்துள்ளது

பைசிகள் ஓடுவது உச்சி முதல் பாதம் வரையிலுள்ள உடல் உறுப்புகள் அனைத்தையும் ஒருங்கினைத்துச்செயல்படுகின்றதால் உடலுக்கும் உள்ளத்திற்கும் இடையில் உள்ள தொடர்பினை உறுதிப்படுத்துகின்றது..இதனால் உள  நெருக்கீடு(STRESS) குறைந்து உள்ளம் தளர்வடைகின்றது , உடல்  எடையையும்  தொப்பியையும்  குறைப்பதற்கு இன்று  படாதபாடு பட்டுக்கொண்டிருப்பவர்கள்  சைக்கிளோட்டுதலை  வளமையாக்கிக்கொண்டால்  அவர்களுக்கு  மிகவிரைவில் பலன் கிடைக்கும்.

சிறுவர் முதல் முதியோர் வரை அனுபவிக்ககூடிய  சைக்கிள் சவாரி உடல்பயிற்சி மட்டுமல்ல  நமது சின்னச் சின்ன வேலைகளான உறவினர் வீடு செல்லல் ,சந்தைக்கு சாமான் வாங்கச்செல்லல்,வணக்கஸ்தலங்களுக்கு செல்லல்,உலாவச் செல்லல் ,மரணவீடுசெல்லல் போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.இதற்காக பெட்ரோல் போட தேவையில்லை  ,செலவு மீதமாகின்றது ,எரிபொருள் போடும் பணத்தினை வேறு விடயத்திகு உபயோகிக்கலாம்

பைசிக்கிள் ஓடும்போது சூழலுக்கு எந்த குந்தகமும் ஏற்படுவதில்லை எனனில் இங்கு புகையோ,ஒலியோ உற்பத்தியாவதில்லை.,இதனால் இது ஒரு சுற்றாடலுக்கு நட்பானதும் பாதுகாப்பானதுமான ஒருமுறையாகும்.(ENVIONMENT FRIENDLY AND ECO PROTECTIVE)

ஆரம்பத்தில் சைக்கிள் ஓட விரும்புபவர்கள் வாரத்தில் 2/3 நாட்கள் 20-30 நிமிடகள் வரை  மிதமான வேகத்தில் ஓட  துவங்கி பின்னர் படிப்படியாக வேகத்தையும் நேரத்தையும் அதிகரித்தால் மேற்கூறிய பலன்களை  அடையலாம் 

No comments

Powered by Blogger.